/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/3.61 லட்சம் கார்டுகளுக்குபொங்கல் பொருட்கள்3.61 லட்சம் கார்டுகளுக்குபொங்கல் பொருட்கள்
3.61 லட்சம் கார்டுகளுக்குபொங்கல் பொருட்கள்
3.61 லட்சம் கார்டுகளுக்குபொங்கல் பொருட்கள்
3.61 லட்சம் கார்டுகளுக்குபொங்கல் பொருட்கள்
ADDED : ஜன 02, 2011 10:50 PM
திருப்புத்தூர்:மாவட்டத்தில் 3.61 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருள் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.திருப்புத்தூரில் பொங்கல் பொருள், வேட்டி,சேலை வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் சம்பத் தலைமை வகித்தார்.அமைச்சர் பேசுகையில், இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பொருள் வழங்குகிறோம். மாநில முழுவதும் 1.96 கோடி கார்டுகளுக்கு வழங்க 102 கோடி ரூபாய் செலவாகிறது.
3.20 கோடி பேருக்கு 420 கோடி ரூபாயில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. சிவகங்கையில் 3.61 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பொருள் வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்காக 522 கோடி ரூபாய்க்கு இலவச பொருள் வழங்கப்படுகிறது,'' என்றார்.தேவகோட்டை ஆர். டி.ஓ., பன்னீர்செல்வம், கூட்டுறவு இணை பதிவாளர் யசோதா தேவி, துணை கலெக்டர் பிரம்மநாயகம், பி.டி.ஓ.,க்கள் பழனிச்சாமி, காளிதாஸ்,செயல் அலுவலர் அமானுல்லா,பேரூராட்சி தலைவர் சாக்ளா, துணை தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் செழியன், காங்., பொதுக்குழு அபிமன்யூ பங்கேற்றனர்.


