/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்டர் மீடியன் மீது பைக் மோதி வாலிபர் பலிசென்டர் மீடியன் மீது பைக் மோதி வாலிபர் பலி
சென்டர் மீடியன் மீது பைக் மோதி வாலிபர் பலி
சென்டர் மீடியன் மீது பைக் மோதி வாலிபர் பலி
சென்டர் மீடியன் மீது பைக் மோதி வாலிபர் பலி
ADDED : ஜன 02, 2011 03:29 AM
பாலவாக்கம் : கிழக்கு கடற்கரை சாலை சென்டர் மீடியன் மீது, பைக் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
மற்றொருவர் படுகாயமடைந்தார். திருவான்மியூர், கணேசன் நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரின் மகன் உதயகுமார்(22). எலக்ட்ரீஷியன். இவர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது நண்பரான, அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவருடன் கானாத்தூர் நோக்கி, கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். உதயகுமார் பைக் ஓட்டி சென்றார். கொட்டிவாக்கத்தில் அவர்கள் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது மோதியது. இந்த விபத்தில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த வினோத்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


