/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தயார்புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தயார்
புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தயார்
புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தயார்
புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தயார்
ADDED : ஜன 01, 2011 01:20 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வரும் 3,4,5 ஆகிய தேதிகளில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளிலும் இந்தாண்டு புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தயார் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அடையாள அட்டைகளும் அந்தந்த தாலுகா அலுவலகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர்களால் பெறப்படும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வரும் 3,4,5 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ள அனைவரும் புகைப்பட அடையாள அட்டையை பெற்று பய னடையுமாறு கலெக்டர் பழனிசாமி தெரிவித் துள்ளார்.


