/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியகுளம்,உத்தமபாளையத்தில் அமையவுள்ளது ஹைடெக் நூலகம் : தலா ஒரு கோடி ரூபாய் திட்டம்பெரியகுளம்,உத்தமபாளையத்தில் அமையவுள்ளது ஹைடெக் நூலகம் : தலா ஒரு கோடி ரூபாய் திட்டம்
பெரியகுளம்,உத்தமபாளையத்தில் அமையவுள்ளது ஹைடெக் நூலகம் : தலா ஒரு கோடி ரூபாய் திட்டம்
பெரியகுளம்,உத்தமபாளையத்தில் அமையவுள்ளது ஹைடெக் நூலகம் : தலா ஒரு கோடி ரூபாய் திட்டம்
பெரியகுளம்,உத்தமபாளையத்தில் அமையவுள்ளது ஹைடெக் நூலகம் : தலா ஒரு கோடி ரூபாய் திட்டம்
பெரியகுளம் : பெரியகுளம், உத்தமபாளையத்தில் ஹைடெக் மண்டல நூலகம் அமைய உள்ளது.தலா ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த நூலகங்கள் அமைக்கப்படவுள்ளது.
தேனியில் மாவட்ட நூலகம் உள்ள நிலையில், வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பெரியகுளம் நகராட்சி, உத்தமபாளையம் பேரூராட்சி பகுதிகள் புதிய நூலகம் அமைய தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எப்., மற்றும் குரூப் 1 உட்பட அரசு தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு வசதியாக நூல்கள் இடம்பெறவுள்ளது. கடந்த காலங்களில் அரசு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் சி.டி., வடிவிலும், பொதுஅறிவு புத்தகங்கள், அதி நவீன தொழில்நுட்ப தகவல்களை பெறுவதற்கு சந்தாதாரர்களுக்கு வசதி செய்து தரப்பட உள்ளது. சந்தாதாரர்கள் புத்தகங்களை ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி, புத்தக ஆசிரியர்கள் உள்ளிட்ட விபரங்களை விரல் முனையில் அறிந்து கொள்வது உட்பட ஹைடெக் வசதியுடன் நூலகம் அமைய உள்ளது. முதல்கட்டமாக பெரியகுளம், உத்தமபாளையம் பகுதிகளில் கட்டடம் கட்ட இடம் பார்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இடம் கொடுக்க விரும்பும் நன்கொடையாளர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மாவட்ட நூலக அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


