ADDED : டிச 31, 2010 11:26 PM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு இந்து ஹைஸ்கூல் சத்திரம் கமிட்டிக்கு பாத்தியப்பட்ட முப்பெரும் பள்ளிகளின் பழைய மாணவர் சங்க கூட்டம் துணை தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது.
செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சங்கரநாராயணன் வரவேற்றார். துணைத் தலைவர் அரிஹரகிருஷ்ணமூர்த்தி தீர்மானங்களை முன்மொழிந்தார். சங்கத்திற்கென தனியே வெப்சைட் துவக்குதல், பதிவு செய்தல், கூட்ட முறைகளை அங்கீகரித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. செயற்குழு உறுப்பினர் சீதாராமன், உதவி தொடக்க கல்வி அலுவலர் நம்பியார் பேசினர். பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தலைமையாசிரியை பத்மா நன்றி கூறினார்.


