Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கண்வலி கிழங்கு சாகுபடிக்கு மானியம் :மூலனூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு

கண்வலி கிழங்கு சாகுபடிக்கு மானியம் :மூலனூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு

கண்வலி கிழங்கு சாகுபடிக்கு மானியம் :மூலனூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு

கண்வலி கிழங்கு சாகுபடிக்கு மானியம் :மூலனூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : டிச 31, 2010 02:21 AM


Google News

வெள்ளகோவில்: முருங்கைக்கு அடுத்தபடியாக கண்வலி கிழங்கு சாகுபடியில் மூலனூர் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மருத்துவ குணம் கொண்ட இதன் விதைக்கு அதிக விலை கிடைப்பதால், கண்வலி கிழங்கு சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. நடவு, மருந்து தெளித்தல் போன்றவற்றுக்காக அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதால், தோட்டக்கலைத்துறை மானியத்தை எதிர்பார்க்கின்றனர் விவசாயிகள்.மருத்துவ குணமுள்ள கண்வலி கிழங்குக்கு நம் நாட்டில் மட்டுமின்றி இத்தாலி, ஜெர்மன் போன்ற வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அதிகளவு கண்வலி விதை ஏற்றுமதி செய்யப்படுகிறது.



விதையில் இருந்து நுண்புழுக்கொல்லி, பாக்டீரியா கொல்லி , குடல் புண், தோல் நோய், விஷமுறிவு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதிக வருவாய் கிடைப்பதால், மூலனூர் பகுதி விவசாயிகள் கண்வலி கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கண்வலி சாகுபடி செய்ய அதிக செலவு செய்ய வேண்டி வந்தாலும், விதை கிலோ ரூ.1,500; கிழங்கு கிலோ 300 ரூபாய் என எப்போதும் வீழ்ச்சியின்றி விலை கிடைப்பதால், மூலனூர் பகுதியில் பலரும் கண்வலி சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். மூலனூர் சுற்றுப்பகுகளில் 1,000 ஹெக்டருக்கு மேற்பட்ட பரப்பில் கண்வலி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ஒரு கிலோ கண்வலி கிழங்கு தேவைப்படுகிறது.ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு கிராம் கார்பென்டிசம் கரைசலில் அரைமணி நேரம் கிழங்கை நனைத்து பின்னரே நட வேண்டும்.



தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா அடியுரமாக இடவேண்டும். அப்போதுதான், நோய் தாக்குதல் குறைந்து, செடிகள் செழிப்பாக வளரும். முதல்முறை சாகுபடி செய்யும்போது கொடி படர்வதற்கு, இரும்பு பந்தல், உரம், மருந்து உபகரணங்கள் என, ஒரு ஏக்கருக்கு கண்வலி சாகுபடி செய்ய 1.5 முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.ஒருமுறை சாகுபடி செய்தால், தொடர்ந்து மூன்று முதல் ஐந்தாண்டு வரை அக்கிழங்கில் இருந்து செடி வளரும்; மறுமுறை சாகுபடி செய்யும்போது, கிழங்கு செலவு, பந்தல் அமைக்கும் செலவு மிச்சமாகிறது. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்தால் போதும்; ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும்.இலை தின்னும் பூச்சி, இலைகருகல், இலை புள்ளிநோய் செடியை தாக்கி, விளைச்சலை பாதிக்கும். இதனால், அடிக்கடி மருந்து தெளிக்க வேண்டியுள்ளது. அதிக நீர் தேக்கம் மற்றும் பனிப்பொழிவு கண்வலி கிழங்கு செடியை பாதிப்பதாக உள்ளது.கடந்த மாதம் பெய்த தொடர் மழையால், பூக்கள் கருகி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இதுபோன்ற நேரங்களில், கண்வலி கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதர சாகுபடிகளுக்கு வழங்குவதுபோல், மருத்துவ குணமுள்ள கண்வலி கிழங்கு சாகுபடிக்கும் மானியம் வழங்கினால், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும்; சாகுபடி பரப்பு அதிகரிக்கும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us