ADDED : டிச 28, 2010 10:56 PM
அவிநாசி: அவிநாசியில் முருக பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடத்தினர்.
அவிநாசி முருக பக்தர்கள் பேரவை 33வது ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி, கிழக்கு ரத வீதியிலுள்ள காசி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடந்தது. நான்கு ரத வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து, சுப்ரமணியப் பெருமானுக்கு மகா அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு, மாலை 6.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மதியம், பழனிக்கு பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்டனர்.