Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ மாலை நேர தென்றல் வீசும் 'கே 1 பாண்ட் ஹில்' 

மாலை நேர தென்றல் வீசும் 'கே 1 பாண்ட் ஹில்' 

மாலை நேர தென்றல் வீசும் 'கே 1 பாண்ட் ஹில்' 

மாலை நேர தென்றல் வீசும் 'கே 1 பாண்ட் ஹில்' 

ADDED : மார் 19, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
கோடை காலம் துவங்க உள்ளதன் எதிரொலியாக, கர்நாடகாவில் வெயில் அடிக்க ஆரம்பித்து உள்ளது. 'குளுகுளு நகரம்' என்று பெயர் பெற்ற பெங்களூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

பகல் நேரத்தில் வெளியே செல்ல யாரும் ஆர்வம் காட்டுவது இல்லை. வெயில் குறைந்த பின், மாலை நேரத்தில் வெளியே செல்கின்றனர். பகல் முழுதும் வெயிலில் வேர்த்து விறுவிறுத்து போனவர்களுக்கு, மாலை நேர தென்றல் வீசும் இடம் உள்ளது.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பி.இ.எம்.எல்., 5வது ஸ்டேஜ் பகுதியில் ஆறுமுகங்கள் கொண்ட முருகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் படிக்கட்டுகளில் ஏறி செல்லும் போது, எதிர்திசையில் பார்த்தால் ஒரு சிறிய மலை இருக்கும். அந்த மலையின் பெயர், 'கே 1 பாண்ட் ஹில்'. மாலை நேரத்தில் மலை உச்சிக்கு சென்றால் சில்லென்று வீசும் காற்று மனதை மயக்கும். அங்கு உள்ள பாறைகள் மீது அமர்ந்து பார்த்தால், எதிர்திசையில் பச்சை, பசேலென காட்சி அளிக்கும்.

மலையை ஒட்டி நைஸ் எனும் நந்தி இன்பிராஸ்ட்ரக்சர் காரிடார் சாலையும் செல்கிறது. மலை உச்சியில் இருந்து சாலையை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். ஆறு முகங்கள் கொண்ட முருகன் சிலையும் தெளிவாக தெரியும். நண்பர்கள், குடும்பத்தினருடன் மனது விட்டு பேசும் இடமாக இந்த மலை உள்ளது. பைக்கில் மலை உச்சி வரை செல்லலாம். சாலை சற்று கரடு, முரடாக இருக்கும். இதனால் கவனமாக செல்ல வேண்டியது அவசியம். காரிலும் மலை உச்சி வரை செல்லலாம்.

செல்வது?

நாயண்டஹள்ளி, ராஜராஜேஸ்வரி மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 1.50 கி.மீ., துாரம் பயணித்து மலையை அடையலாம்.மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஆட்டோக்களில் செல்லலாம். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பி.இ.எம்.எல்., பகுதிக்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ்களும் இயக்கப்படுகின்றன.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us