/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ லால்பாக் பூங்காவில் சைக்கிள் தோட்டக்கலைத்துறை திட்டம் லால்பாக் பூங்காவில் சைக்கிள் தோட்டக்கலைத்துறை திட்டம்
லால்பாக் பூங்காவில் சைக்கிள் தோட்டக்கலைத்துறை திட்டம்
லால்பாக் பூங்காவில் சைக்கிள் தோட்டக்கலைத்துறை திட்டம்
லால்பாக் பூங்காவில் சைக்கிள் தோட்டக்கலைத்துறை திட்டம்
ADDED : ஜூன் 04, 2025 11:33 PM

பெங்களூரு: முதன் முறையாக, லால்பாக் பூங்காவில், பேட்டரியால் இயங்கும் சைக்கிள் வசதி செய்யப்படுகிறது. இதில் சுற்றி வந்து பூங்காவின் அழகை ரசிக்கலாம்.
இதுகுறித்து, தோட்டக்கலை இணை இயக்குநர் ஜெகதீஷ் கூறியதாவது:
பெங்களூரின் லால்பாக் பூங்காவுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்களுக்கு புது அனுபவத்தை அளிக்க, தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.
சைக்கிளை ஓட்டியபடி பூங்காவின் அழகை ரசிக்கலாம். ஹாலந்து, ஜெர்மனி உட்பட மேற்கத்திய நாடுகளில், பொது இடங்களில் சைக்கிளை பயன்படுத்துகின்றனர். இந்த திட்டம் லால்பாக் பூங்காவில் அறிமுகம் செய்யப்படும்.
சைக்கிளில் சுதந்திரமாக, ஆனந்தமாக பூங்காவை சுற்றி வந்து, பூங்காவின் இயற்கை அழகை ரசிப்பது, புது அனுபவமாக இருக்கும். பெச் மொபிலிடி நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு தகுந்த சைக்கிள்களை அறிமுகம் செய்கிறது.
பொதுமக்களின் வரவேற்பை பொருத்து, சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கப்பன் பூங்காவிலும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான எலக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லால்பாக் பூங்காவில் 2,800க்கும் மேற்பட்ட, உள்நாட்டு, வெளிநாடுகளின் மரங்கள் உள்ளன. மாணவர்கள், தாவரவியல் ஆர்வம் உள்ளவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சைக்கிளில் சுற்றிவந்து மரங்களை பார்த்து ரசிக்கலாம்; ஆராய்ச்சி செய்யலாம்.
இந்த மரங்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள, கியூஆர் கோட் பொருத்தப்படும். பூங்காவுக்கு வருவோர், யாருடைய உதவியும் இல்லாமல், கியூஆர் கோட் ஸ்கேன் செய்து, மரங்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
முதற்கட்டமாக 50 மரங்களில், கியூஆர் கோட் பொருத்தப்படும். நீண்ட நாட்களுக்கு பின், லால்பாக் பூங்காவில், ஒரே நேரத்தில் 341 செடிகள் நடப்படுகின்றன. 240 ஏக்கர் பரப்பளவுள்ள லால்பாக் பூங்காவை சுற்றிலும், ஐந்து மீட்டர் உயரமான காம்பவுன்ட் சுவர் உள்ளது.
சுவற்றை ஒட்டியபடி பூங்கா உட்புறம், வெவ்வேறு வகையான 850 மரங்கள் வளர்க்கப்பட்டன. மழை, காற்றால் 320 மரங்கள் தரையில் சாய்ந்தன. எனவே இதே இடத்தில் வேறு மரக்கன்றுகள் நடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.