Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ கரும்பு, வயல்கள் தென்னை மரங்கள் சூழ்ந்த 'குந்தி பெட்டா'

கரும்பு, வயல்கள் தென்னை மரங்கள் சூழ்ந்த 'குந்தி பெட்டா'

கரும்பு, வயல்கள் தென்னை மரங்கள் சூழ்ந்த 'குந்தி பெட்டா'

கரும்பு, வயல்கள் தென்னை மரங்கள் சூழ்ந்த 'குந்தி பெட்டா'

ADDED : மார் 12, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
மாண்டியா மாவட்டம், பாண்டவபுரா, பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது, இங்கு வந்ததால், பாண்டவபுரா என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இங்கு 2,882 அடி உயரத்தில், பாறைகள் நிறைந்த இரு மலைகள் அருகருகே அமைந்துள்ளன. கரும்புகள், நெல் வயல்கள், தென்னை மரங்களால் இந்த மலைகள் சூழப்பட்டுள்ளன. குந்தி பெட்டா பாதை மிகவும் குறுகிய, அதேவேளையில் சவாலான பாதையாக அமைந்துள்ளது.

செங்குத்தாக அமைந்துள்ளதால், கவனமாக ஏறவும், இறங்கவும் வேண்டும். இரு மலைகளின் இடையே அடிவாரத்தில் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகிலேயே சிறிய குளமும் உள்ளது.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு சுவாமி தரிசனமும் செய்துவிட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் இரவு தங்கவும் இங்கு அறைகள் உள்ளன.

குந்திபெட்டா மலையேற்றம், குளத்தின் வலதுபுறத்தில் இருந்து துவங்குகிறது. சிறிது துாரம் ஏறும்போதே, 60 டிகிரி கோணத்தில் ஏற நேரிடும்.

பாறைகள் நிறைந்து காணப்படுவதால், இதில் ஏறுபவர்கள் ஜாக்கிரதையாக ஏற வேண்டும். நீங்கள் மலை உச்சியை அடைய, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாகும்.

இது தவிர, மலையேற்றத்தின்போது மலையை சுற்றி உள்ள பசுமையின் அழகை கண்டு ரசிக்கலாம். இரவிலும் கூட இங்கு மலையேற்றம் செய்யலாம்.

பாறை ஏறுவதில் விருப்பம் உள்ளவர்களுக்கு இது சிறந்த இடமாகும். குந்திபெட்டாவில் இருந்து 4 கி.மீ., தொலைவில் தொன்னுார் ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரி நீர், சுற்றுப்புற கிராமத்தினருக்கு குடிநீருக்கு ஆதாரமாக விளங்குகிறது.

அக்டோபரில் இருந்து மார்ச் மாதம் வரை இங்கு மலையேற்றம் செய்ய உகுந்த காலமாகும். மலையேற்றத்தின்போது, உணவு, குடிநீர் எடுத்துச் செல்லுங்கள்.

வெயிலை தவிர்க்க, மலையேற்றத்தை அதிகாலையிலேயே துவக்குங்கள். மலையேறும்போதே, சூரியன் உதயத்தை காணலாம். குறிப்பிட்ட பாதையை மட்டும் பயன்படுத்துங்கள்.

மலையேற்றத்துக்கு தேவையான காலணியை அணிந்து கொள்ளுங்கள். வெயிலில் இருந்து தப்பிக்க, தொப்பி, கூலிங் கிளாஸ், சன் ஸ்கிரீன் போட்டுக் கொள்ளுங்கள்.

முதலுதவி பெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். கத்தி, விசில், பிளாஷ் லைட், கூடுதல் பேட்டரிகளை எடுத்துச் செல்லுங்கள்.

செல்வது?

பெங்களூரில் இருந்து 150 கி.மீ., தொலைவில் பாண்டவபுரா அமைந்துள்ளது. எனவே, ரயிலில் செல்வோர், மாண்டியா ரயில் நிலையத்துக்கு செல்லுங்கள். அங்கிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள பாண்டவபுராவுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.பஸ்சில் செல்வோர், பாண்டவபுராவுக்கு பஸ்சில் செல்லலாம். அங்கிருந்து டாக்சி, ஆட்டோவில் குந்திபெட்டாவுக்கு செல்லலாம்.



13_Article_0003, 13_Article_0004

குந்திபெட்டா உச்சிக்கு செல்லும் பாதை. (அடுத்த படம்) குந்தி பெட்டா அருகில் உள்ள தொன்னுார் ஏரி.- நமது நிருபர் -



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us