Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/ரத்த கட்டு விரைவில் குணமாக வீட்டு வைத்தியம்

ரத்த கட்டு விரைவில் குணமாக வீட்டு வைத்தியம்

ரத்த கட்டு விரைவில் குணமாக வீட்டு வைத்தியம்

ரத்த கட்டு விரைவில் குணமாக வீட்டு வைத்தியம்

ADDED : மே 18, 2025 12:17 PM


Google News
Latest Tamil News
நமது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் அடிபடும் போது வெளிப்புற தோல் பகுதியின் அடியில் ரத்தம் உறைந்து ரத்த கட்டு ஏற்படுகிறது. இதை குணமாக்கும் சில இயற்கை வைத்திய முறைகளைப் பற்றி பார்ப்போம்.

ரத்த கட்டு அறிகுறிகள் அடிபட்ட பகுதியில் உள்ள தோலுக்கு அடியில் ரத்தம் உறைந்து அந்த இடத்தில் சிறிய புடைப்பு போல் இருக்கும். ரத்தம் உறைந்திருப்பதை சில சமயங்களில் வெறுங்கண்களால் பார்க்க முடியும். நாட்கள் செல்ல செல்ல அந்த இடம் கருப்பு நிறமாக மாறும். ரத்த கட்டு குணமாக நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் புளியை சிறிது எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிதளவு கல் உப்பை சேர்த்து கலந்து, பிசைந்து பசை போல் ஆக்கி அதை ரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் பற்று போட்டு வர ரத்த கட்டு சிறிது சிறிதாக நீங்கும்.

தரமான மஞ்சள் பொடியை சிறிது வெந்நீர் விட்டு கலந்து, அந்த கலவையை ரத்த கட்டு ஏற்பட்ட இடங்களில் களிம்பு போல் வைத்து, ஒரு வெள்ளை துணியால் கட்டு போட வேண்டும். இதை தினமும் செய்து வர விரைவில் ரத்த கட்டு சரியாகும்.

ஆமணக்கு மற்றும் நொச்சி இலைகளை சிறிது பறித்து விளக்கெண்ணெயில் வதக்கி, அந்த இலைகளை ஒரு வெள்ளை துணியால் கட்டி பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர ரத்த கட்டு கரையும். அமுக்கிராங் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை சூடான பசும்பாலில் ஒரு தேக்கரண்டி அளவு கலந்து காலை மாலை குடித்து வர ரத்த கட்டு விரைவில் நீங்கும்.

சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் அமுக்கிராங்கிழங்குச் சூரணத்தை வாங்கி, ஒரு கோப்பை பாலில் அரை ஸ்பூன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் ஐந்து நாட்கள் குடித்து வர, ரத்தக்கட்டு கரைந்துவிடும். அமுக்கிராங் கிழங்குச் சூரண மாத்திரைகளும் சாப்பிடலாம்.

நாட்டு மருந்து கடைகளில் இரத்த பால் என்ற ஒரு வகை வெளிப்பூச்சு கிடைக்கும். இதனை சிறிதளவு தண்ணீர் விட்டு தேய்த்து, இரத்தக் கட்டு ஏற்பட்டுள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து அதில் கால் ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, பொடி அரிசிக் கஞ்சியில் போட்டுவேகவைத்துக் குடிக்கலாம். ஆனால், கர்ப்பிணிகளோ, கருத்தரிக்கும் நேரத்தில் உள்ள பெண்களோ கருஞ்சீரகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளரிக்காயில் சிலிக்கா என்ற நுண்ணிய கனிமம் உள்ளது. இந்த கனிமம், இணைப்பு திசுக்களை வலிமையாக்க உதவுகிறது. மேலும் வெள்ளரிக்காய் குளிர்ச்சி தன்மை உடையது என்பது அனைவருக்கும் தெரிந்தது. இரத்தக் கட்டின் மீது வெள்ளரிக்கையை பயன்படுத்துவதால், வீக்கம், வலி மற்றும் அழற்சி உடனடியாக நிவாரணம் அடைகிறது. வெள்ளரிக்காயை நறுக்கி , ஒரு துண்டை இரத்தக் கட்டின் மீது வைக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us