Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/ கடலைப்பருப்பு சுய்யம்

கடலைப்பருப்பு சுய்யம்

கடலைப்பருப்பு சுய்யம்

கடலைப்பருப்பு சுய்யம்

கடலைப்பருப்பு சுய்யம்

ADDED : ஆக 16, 2025 10:28 PM


Google News
Latest Tamil News
தேவையான பொருட்கள்: n கடலைப்பருப்பு, பாகு வெல்லம் - 100 கிராம், n தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் n முந்திரித்துாள் - ஒரு டீஸ்பூன் n ஏலக்காய்த்துாள் - கால் டீஸ்பூன் n எண்ணெய் -கால் கிலோ n மைதா மாவு - 75 கிராம் n அரிசி மாவு - 2 டீஸ்பூன் n உப்பு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை n மஞ்சள் புட் கலர் - - சிறிதளவு

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்துாள், முந்திரித்துாள்சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.