Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/ செட்டிநாட்டு வடைகறி

 செட்டிநாட்டு வடைகறி

 செட்டிநாட்டு வடைகறி


UPDATED : மே 17, 2026 01:25 PM

ADDED : மே 17, 2026 06:56 AM

Follow on Google

UPDATED : மே 17, 2026 01:25 PM ADDED : மே 17, 2026 06:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:


கடலைப்பருப்பு - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது]

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4

பட்டை - 2

நான்கு காய்ந்த மிளகாய் - சிறிதளவு

பூண்டு - 20 (பொடியாக நறுக்கியது]

இஞ்சி பூண்டு விழுது - இரண்டு ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

பிரியாணி இலை -1

ஏலக்காய் - 2

கிராம்பு - 4

அன்னாசி பூ -1

மஞ்சள், மல்லி, மிளகாய்துாள் - ஒரு ஸ்பூன்

கரம் மசாலா துாள் - 1 ஸ்பூன்

கொத்தமல்லி இலை கொஞ்சம்

கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

கடலெண்ணெய் - 250 மில்லி

செய்முறை:


கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து பின், தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிக்ஸி ஜாரில் போட்டு சோம்பு, காய்ந்த மிளகாய், ஒரு சிறிய துண்டு பட்டை தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காயவைத்து அரைத்த கடலைப் பருப்பு விழுதை சிறுசிறு பக்கோடா போன்று போட்டு வேகவிட்டு எடுக்கவும் (வடை போல சிவக்க வறுக்க கூடாது). ஆறவிட்டு வடைகளை நன்றாக உதிர்த்து விடவும்.

அடுப்பில் கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஏலக்காய், பிரியாணி இலை, கருவேப்பிலை தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பின், பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி பூண்டு சேர்த்து வதக்கவும். பின், தக்காளியை சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் வதங்கியதும் மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லித் துாள், கரம் மசாலா துாள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

உதிர்த்து வைத்துள்ள வடை துண்டுகளை போட்டு மூடி வைக்கவும். 5 நிமிடத்திற்கு பின், தண்ணீரை வடைகள் உறிஞ்சி கெட்டியாக வந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும். கொத்தமல்லி இலை துாவி இறக்கினால், சுவையான செட்டிநாடு வடைகறி ரெடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap