/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/இது ஜோதியின் ஸ்டைல்: தூக்கி வீசும் பொருளில் கைவண்ணம்இது ஜோதியின் ஸ்டைல்: தூக்கி வீசும் பொருளில் கைவண்ணம்
இது ஜோதியின் ஸ்டைல்: தூக்கி வீசும் பொருளில் கைவண்ணம்
இது ஜோதியின் ஸ்டைல்: தூக்கி வீசும் பொருளில் கைவண்ணம்
இது ஜோதியின் ஸ்டைல்: தூக்கி வீசும் பொருளில் கைவண்ணம்

பொதுவாக நாம் ஒரு பொருளை உபயோகப்படுத்தி விட்டால் அதை துாக்கி எறியும் பழக்கம் உள்ளது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்திய பொருட்களை பாதுகாக்கின்றனர். பல ஆண்டுகள் கழித்தும் அந்த பொருட்களை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
இத்தகையவர்களை பார்க்கும்போது நமக்கு சிரிப்பாக வரலாம். ஆனால் அவர்களுக்கு அந்த பொருட்கள் தான் பொக்கிஷமாக இருக்கும்.
இவர்களில் ஒருவர் தான் ஜோதி ஆச்சார்யா, 45. உடுப்பியின் கார்கலா தாலுகா ஹிரியடுக்கா கிராமத்தைச் சேர்ந்தவர். வீட்டில் பயன்படுத்திய பொருட்களை வைத்து பல கலை வண்ணங்களை தயாரிக்கிறார்.
இதுபற்றி ஜோதி ஆச்சார்யா கூறியதாவது:
கல், மரம், களிமண்ணில் இருந்து மட்டுமே கலை பொருட்களை உருவாக்க முடியும் என்று இல்லை. நாம் வீட்டில் பயன்படுத்திவிட்டு துாக்கி வீசும் பொருட்களில் இருந்தும் ஏராளமான கலை வண்ணங்களை உருவாக்க முடியும்.
தண்ணீர், ஜூஸ், ஹார்பிக், ஷாம்பு மற்றும் சமையல் கேன்கள் உட்பட அனைத்து வகையான பாட்டில்களில் இருந்தும் கலை வண்ணங்களை உருவாக்கலாம். எனக்கு சிறு வயதில் இருந்தே கைவினை பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்து, பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி கலைப்படைப்புகளை உருவாக்க துவங்கினேன்.
பாட்டில்களைக் கொண்டு வனவிலங்குகள், பறவைகள் வடிவமைக்கிறேன். என் படைப்புகளை இதுவரை சந்தையில் விற்பனை செய்தது இல்லை. வெளியே எடுத்துச் சென்றால் ஏதாவது சேதம் அடையும் என்று பயம். மனதிருப்திக்காக வீட்டிலேயே வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.