Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ 15 நாட்களில் 1,435 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணித்த அபிஷேக்

15 நாட்களில் 1,435 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணித்த அபிஷேக்

15 நாட்களில் 1,435 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணித்த அபிஷேக்

15 நாட்களில் 1,435 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணித்த அபிஷேக்

ADDED : மே 25, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
டிரிங்... டிரிங்... என்று பெல் அடித்துக் கொண்டு சைக்கிள் ஓட்டுவது சிறுவர்களுக்கு அலாதி பிரியம். சிறுவயதில் சைக்கிள் ஓட்டிவிட்டு பல ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் சைக்கிள் ஓட்டும் முதியவர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

சைக்கிள் ஓட்டுவது உடல் மற்றும் மனதிற்கு பல நன்மைகளை தருகிறது. கிராமப்பகுதிகளில் இன்னும் சைக்கிளை பயன்படுத்துகின்றனர். ஆனால் நகரப்பகுதியில் பெருகிய வாகன போக்குவரத்து நெரிசலால் சைக்கிள் ஓட்டுவதை பெரும்பாலோனார் விரும்புவது இல்லை. ஒரு சிலர் மட்டுமே, சைக்கிளில் வெளியே செல்கின்றனர்.

யாத்கிர்


ஆனால் பெங்களூரை சேர்ந்த அபிஷேக் சிங்கிற்கு சைக்கிள் தான் உலகம். சைக்கிள் ஓட்ட சொன்னால் துாக்கத்தில் இருந்து கூட எழுந்து விடுவார். அப்படி ஓர் ஆசை அவருக்கு, சைக்கிள் மீது.

லாங் டிரைவ் என்றால் கார், பைக்குகளில் செல்வர். ஆனால் அபிஷேக்குக்கு சைக்கிளில் செல்ல வேண்டும் என்பது ஆசை.

இந்த ஆசையை நிறைவேற்ற கடந்த ஜனவரி 31ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு பெங்களூரு விதான் சவுதா முன் இருந்து சைக்கிளில் புறப்பட்டார். இங்கிருந்து யாத்கிர் வரை சென்றுவிட்டு மீண்டும் பெங்களூரு வர வேண்டும் என்பது அவரது இலக்கு.

பெங்களூரு, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரி, விஜயநகரா, கலபுரகி, ராய்ச்சூர், பீதர் வழியாக பிப்ரவரி 5ம் தேதி யாத்கிர் அடைந்தார். இரண்டு நகரங்களுக்கும் இடையிலான துாரம் 558 கி.மீ., பிப்ரவரி 6ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு பீதர், ராய்ச்சூர், கலபுரகி, விஜயநகரா, தார்வாட், கார்வார், உடுப்பி, தட்சிண கன்னடா வழியாக பிப்ரவரி 11ம் தேதி குடகு மடிகேரியை அடைந்தார். யாத்கிர் முதல் குடகு வரை 628 கி.மீ., துாரம்.

பழக்க, வழக்கம்


மடிகேரியில் ஒரு நாள் ஓய்வு எடுத்துவிட்டு, பிப்ரவரி 12ம் தேதி புறப்பட்டார். மைசூரு, மாண்டியா, ராம்நகர் வழியாக பிப்ரவரி 14ம் தேதி பெங்களூரை வந்து அடைந்தார். மடிகேரியில் இருந்து பெங்களூருக்கு 249 கி.மீ., துாரம். மொத்தம் 15 நாட்களில் 1,435 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

இரவில் பெட்ரோல் பங்க்கில் சிறிய டென்ட் அமைத்து துாங்கி உள்ளார். சாலையோர கடைகளில் சாப்பிட்டுள்ளார். இந்த சைக்கிள் பயணத்தின் மூலம் கர்நாடகாவின் பிற மாவட்ட உணவு வகைகள், பழக்க வழக்கங்களை துல்லியமாக புரிந்து கொண்டதாக அபிஷேக் கூறி உள்ளார்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us