நாவில் பட்டவுடன் கரையும் வாழைப்பழ பிரட் அல்வா
நாவில் பட்டவுடன் கரையும் வாழைப்பழ பிரட் அல்வா
நாவில் பட்டவுடன் கரையும் வாழைப்பழ பிரட் அல்வா
ADDED : ஜூன் 06, 2025 11:37 PM

அல்வா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகைகளில் ஒன்று. அல்வாவில் பாதாம் அல்வா, கேரட் அல்வா, கோதுமை அல்வா என பல வகைகளை சொல்லி கொண்டே போகலாம். இந்த அல்வாவை கடையில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலே எளிமையான முறையில் ருசியாக செய்து சாப்பிடலாம். வாழைப்பழம், பிரட் ஆகிய இரண்டையும் சேர்த்து வாழைப்பழ பிரட் அல்வாவை எப்படி செய்ய போகிறோம் என்பதை பார்ப்போம்.
செய்முறை
முதலில் பிரட், வாழைப்பழம் இரண்டையும் தனித்தனியாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இதன்பின், அரைத்து வைத்த, வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். அதனுடன் வெண்ணெய், நாட்டு சர்க்கரை, பட்டை துாள், சுக்கு துாள், வெண்ணிலா எசன்ஸ், பிரட் துாள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். அதில், சிறிதளவு எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடானதும், அதில் கலந்து வைத்த கலவையை போட்டு கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
இதில், நெய்யை ஊற்றி, முந்திரியை போட்டு நன்கு கலக்கவும். அப்படியே, சட்டியில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் முலாம்பழ விதைகள் சேர்த்து நன்கு கலக்கவும். இதையடுத்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ பிரட் அல்வா தயார்.
இந்த அல்வாவை விடுமுறை நாட்களில், ரெடி செய்து, மாலை நேரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு மகிழலாம்
- நமது நிருபர் -.