Dinamalar Logo


/ஸ்பெஷல்/அறுசுவை/ கோடை வெயிலுக்கு இதமாக மாம்பழ கஸ்டர்ட் சோர்பெட்

 கோடை வெயிலுக்கு இதமாக மாம்பழ கஸ்டர்ட் சோர்பெட்

 கோடை வெயிலுக்கு இதமாக மாம்பழ கஸ்டர்ட் சோர்பெட்

 கோடை வெயிலுக்கு இதமாக மாம்பழ கஸ்டர்ட் சோர்பெட்

 கோடை வெயிலுக்கு இதமாக மாம்பழ கஸ்டர்ட் சோர்பெட்

ADDED : மார் 14, 2026 06:40 AM


Google News
Latest Tamil News
- நமது நிருபர் -: வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, ஜில்லுனு சுவையான பானத்தை தேடி செல்வோம். இந்தாண்டு வெயில் காலத்தில், வீட்டிலேயே ஜில்லுனு மாம்பழ கஸ்டர்ட் சோர்பெட் செய்யுங்கள். கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு தருவதற்கு பதில், வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

செய்முறை  மாம்பழத்தின் தோலை நீக்கி நறுக்கவும். பின், மிக்சியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அரைத்து மிருதுவானதாக தயாரிக்கவும்

 ஒரு பாத்திரத்தில் கஸ்டர்ட் பொடி, பால், தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலக்க வேண்டும். இதில், நீங்கள் விரும்பினால் சுவைக்காக வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கலாம்

 நாம் முதலில் அரைத்த மாம்பழம், கஸ்டர்ட் கலவையை ஒன்றாக கலக்கவும். குளிர்ச்சிக்கு 2 மணி நேரம் பிரீசரில் வைக்கவும். அவ்வளவு தான். சுவையான மாம்பழ கஸ்டர்ட் ரெடி. இதை ஒரு கிளாசில் ஊற்றி, அதற்கு மேல் நறுக்கிய பாதாம் பிஸ்தா துாவி அலங்கரிக்கலாம். புதினா இலை வைத்து கூட அலங்காரம் செய்யலாம்.