Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/அறுசுவை/ கொ ரியன் தப் போக்கி ரெசிபி

கொ ரியன் தப் போக்கி ரெசிபி

கொ ரியன் தப் போக்கி ரெசிபி

கொ ரியன் தப் போக்கி ரெசிபி

ADDED : ஜூன் 27, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
இன்றைய '2கே கிட்ஸ்' பலரும் கொரிய நாட்டின் 'பி.டி.எஸ்., குழு, கே டிராமா' தொடர்களின் ரசிகர்களாக உள்ளனர். தற்போது இந்நாட்டின் உணவு வகைகளையும் தேடிப்பிடித்து சாப்பிடும் அளவுக்கு ரசிகர்களாகி உள்ளனர்.

செய்முறை


 குளூட்டன் அரிசி என்றால் 'பசையுள்ள அரிசி' அல்லது 'பிசுபிசுப்பான அரிசி' என்று கூறுகின்றனர்

 முதலில் பாத்திரத்தில் குளூட்டன் அரிசி மாவை அரை கப் எடுத்துக் கொள்ளுங்கள். இதில், சிறிதளவு உப்பு சேர்த்து, கால்கப் வெந்நீரை ஊற்றி கலக்குங்கள். சப்பாத்திக்கு மாவு பிசைவது போன்று பிசைய வேண்டும்

 மாவு பிசைந்த பின், ஒரு விரல் போன்று உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அது மிதந்து மேலே வரும் வரை காத்திரங்கள். அதன் பின், குளிர்ந்த நீரில் மாற்றவும்

 இப்படி செய்வதால், 'தப்போக்கி' மென்று சாப்பிட நன்றாக இருக்கும். அடுத்ததாக சாஸ் தயாரிக்கலாம். ஆன்லைனில் கிடைக்கும் சிவப்பு சில்லி பேஸ்டான 'கோசுசங் சாசை' வாங்கிக் கொள்ளுங்கள்

 மூன்று ஸ்பூன் கோசுசங் பேஸ்டில், இரண்டு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் சோயா சாஸ் ஊற்றி, கொஞ்சமாக பூண்டு போட்டு கலக்கவும்

 ஒரு டம்பளர் கொதிக்கும் தண்ணீரில் இந்த கலவை போட்டு கொதிக்கவிடுங்கள். குளிர்ந்த நீரில் இருக்கும் மாவை வடிகட்டி, கொதிக்கும் சாசில் போருடங்கள். சாஸ் உள்ளே இறங்கி வற்றும்போது, அடுப்பை அணைத்து விடுங்கள்

 அதன் மீது ஸ்பிரிங் ஆனியன்ஸ் துாவி விட்டால், 'கொரியன் தப்போக்கி' ரெடி

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us