Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ கோல்டன் பட்டர் ரைஸ்

 கோல்டன் பட்டர் ரைஸ்

 கோல்டன் பட்டர் ரைஸ்


ADDED : மே 02, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 03:38 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பொதுவாக ஜீரா ரைஸ், லெமன் ரைஸ், பிரைடு ரைஸ், மசாலா ரைஸ் என, பல விதமான உணவுகளை சுவைத்திருப்போம். ஆனால், கோல்டன் பட்டர் ரைஸ் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. மாறுபட்ட சுவை உடைய இந்த உணவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

l வெண்ணெய் - அரை கப்

l இஞ்சி - சிறிய துண்டு

l மஞ்சள் துாள் - ஒன்றே கால் ஸ்பூ ன்

l மிளகு - கால் ஸ்பூன்

l பிரவுன் ஷுகர் - 1 ஸ்பூன்

l உப்பு - தேவையான அளவு

l பாசுமதி அரிசி - 2 கப்

l தண்ணீர் - 3 கப்

l முந்திரிப்பருப்பு - கால் கப்

l வெங்காயம் - 2

l கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து, மிதமான தீயில் வைக்கவும். கெட்டியான மூடி உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வெண்ணெயை ஊற்றவும். வெண்ணெய் கரைந்து கட்டிகள் எழ துவங்கியதும், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகு, பிரவுன் ஷுகர், உப்பு, மஞ்சள் துாள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

இதில், அரிசியை சேர்த்து, நன்றாக கிளறவும். அனைத்து பொருட்களும் சேரும் வரை கிளறவும். நீரை சேர்த்து சில நிமிடங்கள் அதிகமான தீயில் வைத்து கிளறவும். அதன்பின் சமன்படுத்தி பாத்திரத்தை மூடவும். மிதமான தீயில், 15 நிமிடம் வேக வைக்கவும். அதன்பின் அடுப்பை அணைத்து விட்டு, மூடியுடன், 10 நிமிடம் வைத்திருக்கவும். அதுவரை மூடியை திறக்கக்கூடாது.

அதன்பின் மூடியை திறந்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை போட்டு கிளறினால், சுவையான கோல்டன் பட்டர் ரைஸ் தயார். இதன் நறுமணமே சாப்பிட துாண்டும். தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறுங்கள். இதை தயாரிக்க அதிகபட்சம், 40 நிமிடம் போதும். குட்டீஸ்களுக்கு மதிய உணவுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பலாம்.

விருப்பம் இருந்தால், இஞ்சி, பூண்டு விழுதும் சேர்க்கலாம். சுவை அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us