Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ சமையல் மணக்க டிப்ஸ்

சமையல் மணக்க டிப்ஸ்

சமையல் மணக்க டிப்ஸ்


ADDED : ஜூன் 14, 2025 08:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 08:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சூப் செய்யும்போது இட்லியை சிறு துண்டுகளாக்கி, வெண்ணெயில் பொரித்துப் போட்டால் புது சுவை தரும்.

காலிபிளவரை வேகவிடும்போது, சிறிது வினிகரை சேர்த்தால் துர்வாசனை ஏற்படாது.

கேக் செய்யும்போது மாவு கலவையுடன் சிறிதளவு, தேன் சேர்த்துக் கொண்டால், சுவையான, மிருதுவான கேக் கிடைக்கும்.

பிரட் ஸ்லைஸ்களில் சால்ட் பட்டர் அல்லது நெய் தடவி அதன்மேல், இட்லி பொடியை துாவி எண்ணெயில் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பாக இருக்கும்.

ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி, உப்பு, மிளகாய் பவுடர், வெந்தய பொடி, பெருங்காய பவுடர் கலந்து தாளித்தால் வித்தியாசமான சுவையில் ஊறுகாய் கிடைக்கும்.

குலோப் ஜாமூன் மீந்துவிட்டால் அதில் மைதா மாவை போட்டு, மாவு பதத்திற்கு பிசைந்து, சப்பாத்தி போல திரட்டி, சதுர துண்டுகளாக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் பிஸ்கட் தயார்

வாழைத்தண்டு பொரியல் அடிக்கடி சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சு வெளியேறிவிடும்.

பூசணி துருவலை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து, அல்வா செய்தால் சுவை கூடும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us