Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ மிளகாய் வத்தல் சில்லி சிக்கன்

 மிளகாய் வத்தல் சில்லி சிக்கன்

 மிளகாய் வத்தல் சில்லி சிக்கன்


ADDED : மே 16, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 03:29 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: மிளகாய் வத்தல் சில்லி சிக்கனுக்கு தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

வர மிளகாய் - 200 கிராம்

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கு ஏற்ப

செய்முறை

சிக்கனை நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை வேக வைக்கவும். 5 நிமிடத்தில் கொதி நிலைக்கு வந்தவுடன் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் விதைகள் நீக்கப்பட்ட மிளகாய் வத்தல் போட்டு நன்கு கிளறிவிடவும்.

சிக்கன் வேகும் அளவிற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு இதனுடன் மிளகு துாள் சேர்க்கவும்.

தண்ணீர் சுண்ட வற்றியதும், சிக்கனை அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இறுதியாக தாளிப்புக் கரண்டி அல்லது சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, இலவங்கபட்டை, ஸ்டார் பூ போட்டு தாளித்தால் போதும்.

நல்ல சுவை மற்றும் காரத்துடன் மிளகாய் வற்றல் சில்லி சிக்கன் தயார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us