Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/ஆடுகளம்/ மகளிர் கிரிக்கெட்டுக்கு மாநிலத்தில் முன்னுரிமை

 மகளிர் கிரிக்கெட்டுக்கு மாநிலத்தில் முன்னுரிமை

 மகளிர் கிரிக்கெட்டுக்கு மாநிலத்தில் முன்னுரிமை


ADDED : மே 15, 2026 03:33 AM

Follow on Google

ADDED : மே 15, 2026 03:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: ''கர்நாடகாவில், மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்கள் நடக்கும்,'' என, கே.எஸ்.சி.ஏ., நிர்வாகக் குழு உறுப்பினர் கல்பனா வெங்கடாச்சார் கூறி உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

கே.எஸ்.சி.ஏ., எனும், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனின் ஆறு மண்டலங்களிலும் பயிற்சி மையங்கள் துவங்க முடிவு செய்து உள்ளோம். இதன் மூலம், திறமையான வீரர் - வீராங்கனைகளை கண்டறிந்து, அவர்களின் திறன் மேம்படுத்தப்படும்.

ஆறு பயிற்சி மையங்களின் வீரர், வீராங்கனைகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகளின் மூலம், 25 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் பெங்களூருக்கு வரவழைக்கப்படுவர். அங்கு அவர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கப்படும்.

புறநகர் பகுதியில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் தேவைகளை, அசோசியேஷன் கண்டறிந்து உள்ளது. வரும் நாட்களில், இரு பாலருக்கும் சிறந்த பயிற்சி அளிக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறுமிகளுக்கான கிரிக்கெட் பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டு உள்ளன. இது, மகளிர் கிரிக்கெட்டில் நிச்சயம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

காலம், வேகமாக மாறி கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டில் பெண்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்கள் பல சவால்களையும் எதிர்கொள்கின்றனர். இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து, வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்.

மாநிலத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இனிமேல், திறமையான வீராங்கனைகளை அடையாளம் காணும் பணி முழு வீச்சில் நடக்கும்.

கர்நாடகாவை சேர்ந்த அதிகமான வீராங்கனைகள், இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. இதற்கான முயற்சியில் அசோசியேஷன் தீவிரமாக ஈடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap