Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடுகளம்/ கோலாரில் விளையாட்டு போட்டிகள்

கோலாரில் விளையாட்டு போட்டிகள்

கோலாரில் விளையாட்டு போட்டிகள்

கோலாரில் விளையாட்டு போட்டிகள்

ADDED : அக் 23, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
கோலார் மாவட்ட மாஸ்டர் அத்லெட்டிக்ஸ் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான மாஸ்டர் அத்லெட்டிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏற்பாடு நடக்கிறது.

இதுகுறித்து, மாஸ்டர் அத்லெட்டிக்ஸ் அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கை:

கோலார் மாவட்ட மாஸ்டர் அத்லெட்டிக்ஸ் அசோசியேஷன், அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது. வரும் டிசம்பர் 19, 20, 21ம் தேதிகளில் மாநில அளவிலான மாஸ்டர் அத்லெட்டிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்த, தயாராகி வருகிறது.

கோலார் நகரின், விஸ்வேஸ் வரய்யா விளையாட்டு அரங்கில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில், ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கலாம்.

போட்டிகள் தொடர்பாக, கூடுதல் தகவல் வேண்டுவோர் கோலார் மாவட்ட மாஸ்டர் அத்லெட்டிக்ஸ் அசோசியேஷன் செயலர் மாரப்பாவை, 99808 85968 மற்றும் இணை செயலர் கவுஸ் கானை 98459 64018 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

விளையாட்டுப் போட்டிகளுக்கு தேவையான, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து வருகிறோம். இந்த போட்டிகள், விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை காட்ட, உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us