Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடுகளம்/ 'எக்ஸ்' பதிவு போடாமல் மவுனம் காக்கும் ஆர்.சி.பி., 

'எக்ஸ்' பதிவு போடாமல் மவுனம் காக்கும் ஆர்.சி.பி., 

'எக்ஸ்' பதிவு போடாமல் மவுனம் காக்கும் ஆர்.சி.பி., 

'எக்ஸ்' பதிவு போடாமல் மவுனம் காக்கும் ஆர்.சி.பி., 

ADDED : ஜூலை 04, 2025 05:27 AM


Google News
ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டி, கடந்த மாதம் 3ம் குஜராத் ஆமதாபாத்தில் நடந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி, ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல்முறை கோப்பையை வென்றது.

இதனால் ஆர்.சி.பி., ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பெங்களூரு நகரமே கொண்டாட்ட களமாக மாறியது. ஆர்.சி.பி., அணியின் அதிகாரபூர்வ 'எக்ஸ்' பக்கத்தில், ஆர்.சி.பி., அணியினர் கோப்பையுடன் இருக்கும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டன.

ஆனால் இந்த மகிழ்ச்சி 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. மறுநாள் 4ம் தேதி ஆர்.சி.பி., அணி வெற்றி கொண்டாட்டம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. மைதானம் முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர்.

கடைசியாக 5ம் தேதி ஆர்.சி.பி., 'எக்ஸ்' பக்கத்தில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தும், தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பதிவு வெளியிடப்பட்டது. பின், எந்த பதிவும் போடவில்லை. ஆர்.சி.பி., அணி கோப்பையை வென்று, நேற்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுதொடர்பாகவும் ஒரு பதிவு கூட நேற்று வெளியிடவில்லை

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us