Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ பரதத்தில் கலக்கும் 'அரண்மனை கிளி' கிருபா பட்கே

பரதத்தில் கலக்கும் 'அரண்மனை கிளி' கிருபா பட்கே

பரதத்தில் கலக்கும் 'அரண்மனை கிளி' கிருபா பட்கே

பரதத்தில் கலக்கும் 'அரண்மனை கிளி' கிருபா பட்கே

ADDED : மார் 16, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
பரதநாட்டியம் என்பது நடனம் மட்டுமல்ல. நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக பரதநாட்டியம் திகழ்கிறது.

தட்சிண கன்னடா மாவட்டம், முண்டாஜே கிராமத்தை சேர்ந்தவர் கிருபா பட்கே, 51. இவர், இசை குடும்பத்தில் பிறந்தவர். இதனாலே, இசை, பரதநாட்டியம் மீது ஈர்ப்பு இருந்து உள்ளது.

பள்ளி படிப்பை முடித்ததும், அரண்மனை நகரான மைசூரு பல்கலைக்கழகத்தில் நடனத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அதன் பின்னரும், ஆர்வம் குறைந்தபாடில்லை. இதனால், பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இது மட்டுமின்றி, வீணையில் முதுகலைப் பட்டமும், இசையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

சமஸ்கிருதம்


கலையில் ஆர்வம் செலுத்தியது மட்டுமின்றி, கல்வியிலும் ஆர்வமாக இருந்தார். இதன்படி, கர்நாடக மாநில திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இதற்கிடையில், பரதத்தில் புகழின் உச்சியில் இருந்த பல குருக்களிடம் சென்று தீவிரமாக பயிற்சி பெற்றார்.

சாந்தாலா விருது பெற்ற கே.முரளிதர் ராவ், கர்நாடக கலாஸ்ரீ பி. கமலாக் ஷா ஆச்சார்யா, டாக்டர் எஸ்.வி.ருக்மணி, கர்நாடக கலாஸ்ரீ நஞ்சுண்ட சுவாமி போன்ற குருக்கள் அடங்குவர்.

முதலில், ஒரு சிறிய இடத்தில் பரதநாட்டியம் கற்று கொடுக்க ஆரம்பித்தார். படிப்படியாக உயர்ந்து தற்போது, நித்யாகிரி எனும் நடனப் பள்ளியே நடத்தி வருகிறார்.

இதுவரை 1,000க்கும் மேற்பட்டோருக்கு கற்று கொடுத்து உள்ளார். தற்போது, மைசூரில் உள்ள டாக்டர் கங்குபாய் ஹங்கல் இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராகவும் உள்ளார்.

வயதுக்கு தடை


நமக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து வேலை செய்ய துவங்கி விட்டோம் என்றால், அது வேலை போன்றே தெரியாது. உழைப்பதற்கு வயதும் தடையாக இருக்காது.

அவரிடம் இருந்து ஒரு சில வார்த்தைகள்:

என் தாயின் குடும்பத்தில் அனைவரும் கலையின் மீது ஆர்வம் கொண்டவர்கள். தந்தை வழி குடும்பத்தில் அனைவரும் கல்வியில் சிறந்தவர்கள். இதன் காரணமாகவே கல்வி, கலை என இரண்டிலுமே கவனம் செலுத்தவும், வெற்றி பெறவும் முடிந்தது.

ஆரம்பத்தில் பரதநாட்டியத்தை பலரும் கற்றுக்கொள்வர். இருப்பினும், சிலர் பொருளாதார சூழல், வீட்டின் நிலைமையால் பாதியில் நிறுத்தி விடுகின்றனர். மக்கள், தங்கள் கலைத் தேடலை தொடர வேண்டும். ஏனெனில், அப்போது தான் உடல், மனம் என இரண்டும் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.

அரசு பள்ளிகள், கல்லுாரிகளில் நடனம், இசை சொல்லி கொடுக்கும் ஆசிரியரை நியமிக்க வேண்டும். இதை வாக்காக எடுத்துக் கொண்டால் ஒவ்வொருவரும் அரண்மனை கிளிகள் தான்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us