கதைச் சுருக்கம்
பொதுவாக ஹாலிவுட் படங்களில் க்ளைமாக்ஸ் காட்சிகள்தான் மயிர் கூச்செரியும்படி இருக்கும். ஆனால் 2012 படத்தின் ஆரம்ப காட்சிகள் முதலே பிரமாண்டமும், பில்டப்களும்தான். வானுயர்ந்த கட்டிடங்கள், பிரமாண்ட மேம்பாலங்கள்எல்லாம் இடிந்து விழுவதும், பற்றி எரிவதும், அதனூடே ஒரு காரிலும், அதன் பின் குட்டி விமானத்திலும் ஒரு சாமான்ய குடும்பம் தப்பி பிழைத்து ஓடுவது, எரிமலை வெடித்து சிதறுவது, பணிமழையில் விமானம் விழுந்து நொறுங்குவதும், அதில் இருந்து சிலர் காரில் தப்பிப்பது, சுனாமி பேரலையில் உலகமே தத்தளிப்பது உள்ளிட்ட இன்னும் பல காட்சிகள் அடுத்தடுத்து படம் முழுக்க பரவிக் கிடப்பதும், அது கிராபிக்ஸ் எனும் எண்ணம் எள்அளவும் எழுந்து விடாவண்ணம் இயக்குனரும், பிற டெக்னீசியன்களும் பாடுபட்டிருப்பதும் ஏதோ, உலகம் நம் காலடியில் கைநழுவவுது மாதிரி படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் பயமுறுத்தி விடுகிறது.
இந்தியா, சீனா, அமெரிக்கா என படம் பயணிக்காத இடமே இல்லை என்பதுபோல், உலகம் முழுக்க படமாக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் சென்டிமெண்ட் சமாச்சாரங்களுக்கும் பஞ்சமில்லை.
காட்ஸில்லா, இன்டிபென்டன்ஸ் டே, த டே ஆப்டர் டுமாரோ உள்ளி்ட்ட ஹாலிவுட் பிரமாண்ட படங்கள் இயக்கிய ரோலண்ட எம்மரிச்சின் படமாயிற்றே... உலக அழிவிற்கும் பயமுறுத்தலுக்கும் கேட்கவா வேண்டும்?!
ருத்ரம் : கோர தாண்டவம்!













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.