கதைச் சுருக்கம்
மேலும், ஒரு வாரம் கண்டீஷன் அப்ளேயுடன் சேர்ந்து வாழ வந்திருக்கும் காஜல் அகர்வால் மேல், குடித்துவிட்டு ஹீரோ ஜீவா, வாமிட் எடுப்பதும், அடுத்த சீனிலேயே ... காஜல், தான் சாப்பிட போட்டு வைத்த ஆபாயிலை எடுத்துபோட்டு சாப்பிட்டபடி அதை தான் எடுத்த வாமிட்டோடு, ஜீவா ஒப்பிட்டு பேசுவதும்.... உவ்வே ரக காமெடிகள் அல்ல ... கர்மங்கள்! அதே போன்று, சுழலில் மாட்டிய போட்டில் சிக்கியதால் ஜீவா, காஜல் உள்ளிட்ட அனைவரும் உண்மை பேசுவதாக நினைத்து, காப்பியில் எச்சில் துப்புவேன் என்பதும், ஆர்.ஜே.பாலாஜி, நான், சப்பியபடி தூங்குவேன்.. என்று விட்டு, விரல் சப்பியபடி என்பதும்..., எல்லோரும் அடிக்கடி ஊர் மேஞ்சா.... என்பதும், எலி குஞ்சை பிடிக்கக் கூடாத இடத்தில் பிடித்துக் கொண்டு, எவனோ ஒருத்தன்... நிற்பதும், அது சம்பந்தமான டயலாக்குகளும் படத்திற்கு பெரிய மைனஸ்.
ஆக மொத்தத்தில் டி.கே.வின் எழுத்து, இயக்கத்தில் கவலை வேண்டாம் எனும் பாசிடீவ் டைட்டில் மட்டுமே ப்ளஸ். மற்றபடி எண்ணற்ற குறைகள், நிறைய லாஜிக் மீறல்கள், வரம்பு மீறிய டபுள் மீனிங் வசனங்கள் காட்சிகள்... நிரம்பிய, கவலை வேண்டாம் படத்தால் தமிழ் திரையுலகம், நிச்சயம், நிறைய கவலை கொள்ள வேண்டியிருக்கும்! அதையும் தாண்டி, அதிசயபிறவிகள் ஒரு சிலர்... கவலை மறந்து சிரிக்கலாம், ரசிக்கலாம், பார்க்கலாம்..!
-------------------------------------------------
கல்கி திரை விமர்சனம்
எதிர்பார்ப்பைத் தூண்டிய அம்சங்கள்:
சற்றே கீழ்நோக்கி வளைந்த கூர் மூக்கு இருந்தாலும் அழகான ஹீரோ ஜீவா.
கச்சிதமான உடற்கட்டு, கவர்ச்சியான உச்சரிப்பு, மிகையில்லாத இயல்பான நடிப்பைக் கொண்டிருக்கும் பாபி சின்ஹா.
காஜூ பர்ஃபி காஜல் அகர்வால்.
யாமிருக்க பயமேன் வெற்றிப்படம் தந்த இயக்குநர் டீகே.
தமிழ்த் திரைப்படம் புது அல்லைக்கை ஆர்ஜே பாலாஜி.
காமெடி டைம் மயில்சாமி, மனோபாலா.
ஆனால் இவ்வளவு எதிர்பார்ப்பபையும் தவிடு பொடியாக்கியிருக்கிறது. கவலை வேண்டாம் படம், உண்மையிலேயே கவலைப்படவும் வைக்கிறது. மோசமான படத்துக்கு விமர்சனம் எதற்கு? என்ற கேள்வி எழுவது நியாயமானதே! காரணம் சொல்கிறேன்.
இதுபோன்ற திரைப்படங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வாய்ப்பாகத்தான் இந்த விமர்சனம். சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் இந்தப் படத்தில் வந்திருப்பன போன்று மலிவான ஆபாச வசனங்களும், காட்சி அமைப்புகளும் இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.
ஒரு பீப் பாடலுக்குக் கொந்தளித்த சமூக ஆர்வலர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்? நூறு பீப் பாடலுக்குச் சமமான பல கொச்சை வார்த்தைகள் படம் நெடுகிலும்.
அத்துடன் ஆபாச வார்த்தைகளில் ஓரெழுத்தை மாற்றிப் பாத்திரங்கள் உச்சரித்து கிச்சு கிச்சு மூட்ட முயன்றிருக்கிறார்கள். கத்துக்குட்டி ஆர்ஜே.பாலாஜி இதைச் செல்வதைக்கூட மன்னித்துவிடலாம்.
ஆபாசத்துக்கு இணையாக அருவருப்பையும் அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் நீச்சல் குளத்தை அசிங்கப்படுத்துவதில் ஆரம்பிக்கிறது அருவருப்புக் கலாச்சாரம், பாத்திரங்கள் மற்றவர் மீது வாந்தி எடுப்பது, இயற்கை உபாதையை கழிப்பது, ஆடையின்றி இருப்பது எனப் பட்டியல் நீள்கிறது.
கதாநாயகி தாம் பள்ளிப் பருவத்தில் மஞ்சள் புத்தகம் படிப்பதாகச் சொல்லிக் கொள்வது மாதிரியான முகச்சுளிப்பு வசனங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இரு பெண்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம்தான் கதையின் கரு. அதையும் சமீபத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் பார்த்தாகிவிட்டது. படத்தில் காண்டு என்ற சொல் பல முறை வருவதைக் கேட்டு ரசிகர்கள் காண்டு ஆவதென்னவோ உண்மை!
பாபி சிம்ஹா எப்பேர்ப்பட்ட நடிகர்! அவரையும் வீணடித்திருக்கிறாரகள். மயில்சாமியெல்லாம் பஞ்ச் டயலாக் சொல்கிறார் ஹீம்!
ஊட்டி, குன்னூர் வனப்பையெல்லாம் குழைத்து திவ்யமாய்க் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஜே.
ஒலிப்பதிவு கிரிஸ்டல் கிளியர்.
நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு ஆபாசம் மற்றும் அருவருப்பை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். கடும் கண்டனங்கள்!
மொத்தத்தில்: படம் பார்க்காதவர்களுக்குக் கவலை வேண்டவே வேண்டாம்!
(திரையரங்கில் படம் பார்த்த ரசிகர்கள் பலரிடமும் கருத்து கேட்டோம். சண்டைக்கு வருகிறார்கள்)















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!