கதைச் சுருக்கம்
கல்கி திரை விமர்சனம்
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க தலைப்பை ஆங்கிலத்தில் எழுதி முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் மது வகை ஒன்றின் பெயர் வருமாறு அமைத்திருக்கிறார்கள். தமிழ்ப் பெயர் என்றும் சொல்லிக் கொள்ளலாம்; சரக்கையும் முதன்மைப்படுத்தலாம் என்று திட்டம் போட்டுப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆரம்பக் காட்சியிலேயே தள்ளாட்டத்துடன் கதாநாயகர்கள் வருகிறார்கள். அவ்வளவு ஏன்? டைட்டில் கார்டே மதுக்குப்பிக்குள்தான் காட்டப்படுகிறது!
நண்பரை ஒதுக்கச் சொல்லும் காதலிகள் மற்றும் மனைவிகளை எத்தனை படங்களில்தான் சித்தரிப்பார்களோ! தலைவனுக்காக மொட்டை அடிப்பவன் தொண்டன்; அந்தத் தொண்டனையே மொட்டை அடிப்பவன் தலைவன் என்று நேரடியாகச் சில வசனங்கள் குத்துகின்றன. எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம்... புருஷன் ஓடிப்போனாலும் உண்ணாவிரதம் என்று மறைமுக இலக்கியக் குத்துக்களும் படத்தில் உண்டு.
இமானின் இசையில், லக்கா மாட்டிக்கிச்சு பாடல் பரவாயில்லை. குறிப்பிட்ட சமூகத்தைக் கிண்டல் செய்யும் போக்கு தொடர்வது திரையுலகின் அவலமே! சந்தானத்தின் நகைச்சுவை மற்றவர்களைப் புண்படுத்துவதிலேயே வெளிப்படும் என்ற விதி இதிலும் பின்பற்றப்படுகிறது. நகைச்சுவையின் பல பரிமாணங்களையும் அவர் உணர்ந்து நடித்தால் பல உயரங்களை அவரால் எட்ட முடியும்.
ஆர்யாவின் 25வது படம் இது. காட்சிக்குக் காட்சி வரும் அவர் ஒரேவிதமான உரையாடல், உடல்மொழி போன்றவற்றை வெளிப்படுத்துகிறார். மொத்தத்தில் ச.வா.ஒண்ணாப் படிச்சாங்களோ இல்லையோ ஒண்ணாக் குடிச்சாங்க... குடிச்சாங்க.... குடிச்சுக்கிட்டே இருக்காங்க
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!