கதைச் சுருக்கம்
குமுதம் சினி விமர்சனம்
சூர்யா மாதிரி ஒரு மாஸ் ஹீரோ, பேயாக நடித்த துணிச்சலுக்காகவே பாராட்டலாம்!
ஒரு பயங்கர விபத்துக்குப் பிறகு சூர்யாவால் பேய்களைப் பார்க்க முடிகிறது. அந்தப் பேய்களின் உதவியுடன் தன் குடும்பத்தை அழித்த அயோக்கியர்களை காலி செய்வதுதான் கதை!
கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல் என்ற வழக்கமான சூர்யாவைவிட, பேய் சூர்யா செமை. கண்ணாடிக்குள்ளேருந்து கையை மடக்கும் காட்சி சிலீர். வித்தியாசமான முகவெட்டு, சிரிக்கும்போது மட்டும் தெரியும் பல்வெட்டு என்று பளிச்.
பேய் சூர்யா யார் என்பதும் பிரேம்ஜியும் ஒரு பேய்தான் என்பதும் நல்ல சஸ்பென்ஸ்.
நயன்தாரா கொஞ்சம் பக்கா. க்ளோசப்பில் கொஞ்சம் அக்கா!
பிரணிதா ஓக்கே!
இசை யுவன் ஷங்கர் ராஜாவா? அந்தப் பெயரில் வேறு யாராவதா? முடில!
நீ யாரு? சிலோனா?
இல்ல தமிழன்! வசனம் எப்போதாவது பளிச்.
கொஞ்ச நேரம் வந்தாலும் பார்த்திபன் தானும் ஒரு ஹீரோ என்பதை நினைவுபடுத்தி, கழட்டுகிறார்.
பிரேம்ஜி இனிமேல் சரக்கு பற்றி பேசக்கூடாது என்று யாராவது தடை உத்தரவு வாங்கினால் தேவலை. அவரும், நான் கடவுள் ராஜேந்திரனும் அவ்வப்போது புன்னகைக்க வைக்கிறார்கள்.
முன்பாதி இழுக்கிறது! பின் பாதி ஈர்க்கிறது!
மாசு - தமாசு!
குமுதம் ரேட்டிங் - ஓகே
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.