கதைச் சுருக்கம்
------------------------------------------------------------
கல்கி திரை விமர்சனம்
விஜய்யின் அறிமுகக் காட்சியில் வில்லனின் எடுபிடிகளின் காலில் அவர் விழும்போதே ரசிகர்களுக்கு ஏமாற்றம் தொடங்கிவிடுகிறது. பதுங்கிப் பாயும் எந்தவித எதிர்காலத் திட்டமும் இல்லாத, கதையினந் ஆரம்ப நிலையிலேயே ஏன் அப்படிச் செய்கிறார் என்பது விளங்கவில்லை. அந்தச் சமயத்தில் பாத்திரங்களின் உரையாடலில் இருந்து எப்போதெல்லாம் வில்லனின் கையாட்கள் கிராமத்தினரைத் துன்புறுத்த வருகிறார்களோ அப்போதெல்லாம், காலில் விழும் உத்தியைத்தான் அவர் வழக்கமாகக் கையாளுகிறார் என்பதையும் அவதானிக்க முடிகிறது. விஜய்யின் அப்பாவாக வரும் புலிவேந்தன் (இன்னொரு) விஜய்யும் எந்த எதிர்ப்புமின்றி வில்லன் தரும் விஷத்தைக் குடித்து ஊர் மக்களைக் காப்பாற்றுகிறார்! அவரது அலங்கார மாறுவேடப் போட்டி சாமியார் போல இருக்கிறது.
கதைக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா என்று இரண்டு கதாநாயகிகள். ஒரு கதாநாயகிகூடத் தேவைப்படாத அளவுக்குத்தான் திரைக்கதை இருக்கிறது. அவரது உடையலங்காரம் விரசமாக .ள்ளது. இடைவேளைக்குப் பிறகு ஸ்ருதி, படுத்துக் கொண்டே நடிக்கிறார். ஆம்! அவரை ஒரு பலிபீடத்தில் கிடத்தி, ஒரு குண்டாந்தடியை அவர்மீது அசைத்துக் கொண்டே ஸ்ரீதேவி வரும் பல காட்சிகள் நகர்கின்றன.
பேசும் பறவை, பேசிவிட்டுக் காறிதுப்பும் ஆமை, நாக்கினால் தடவினால் வழிகாட்டும் பச்சைத் தவளை, சித்திரக் குள்ளர்கள், இயல்பாகவே நீலநிறத்தைக் கொண்ட கண்கள் மற்றும் கோபமடைந்தால் கோரை பற்கள் வளரும் அமைப்புடைய வேதாளங்கள், மோதிரத்தில் இருக்கும் சிலந்தியின் காலை அழுத்தினால் வெளியேறும் வசியமாக்கும் பச்சை வண்ண வசிய வஸ்து, ஒற்றைக்கண் ராட்சசன் என்று பல அம்சங்களும் படத்தில் உண்டு. காதைக் கிழிக்கும் வகையில் இசை இருக்கிறது. மாயா ஜாலப் படமா அல்லது சரித்திரப் படமா என்ற குழப்பம் நமக்கு மட்டுமல்ல... இயக்குநருக்கும் கடைசிவரை இருந்திருப்பது தெரிகிறது. வெவ்வேறு வண்ணமுள்ள துணிகளை ஆங்காங்கே கிழித்து தைத்தும் அணிவதுதான் அந்தக் கால வழக்கம் போலும்! மிக மோசமான ஆடை வடிவமைப்பு!
புலி - விட்டலாச்சாரியா ரிட்டர்ன்ஸ்!























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!