கதைச் சுருக்கம்
-----------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
சமீபத்தில் நிகழ்ந்த கௌரவக் கொலையை நினைவுப் படுத்தும் படம்!
ஊரில் யார் காதலித்தாலும் எதிர்க்கிறார் ஜாதி வெறி பிடித்த ஊர் பெரியவர் ராதாரவி. ஊரில் நடக்கும் காதலையெல்லாம் சிங்கம் மாதிரி ஆக்ரோஷமாய்த் தடுக்கும் அவரது தம்பிப் பையன் விமல், ஒரு காதலில் விழ, மாப்ள ஆனானா? இல்லையா? என்பதை ஜாலியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.
விமல் படத்துக்குப் படம் நடிப்பில் முன்னேற்றம் டான்ஸிலும் மின்னுகிறார்.
மீண்டும் அஞ்சலி. அதே பழைய துடுக்கு, கோக்குமாக்கு என்று ஆளை வசியப்படுத்துகிறார்.
சூரி, ஆங்கிலக் கொலை செய்வதை இனியாவது நிறுத்துங்களேன்.
தாங்கள் தான் ஆண்ட பரம்பரை, தங்களுக்குத்தான் முன்னுரிமை என்ற இரண்டு ஜாதியினர் தகராறில் தேர்த் திருவிழாவே ஊரில் நடக்கவில்லை. கடைசியில் ஹீரோவின் நண்பனான வௌ்ளைக்காரன் தன்னுடைய நாட்டவர்கள் நிறையப் பேரை அழைத்து வந்து நாங்களும் இந்த நாட்டை ஆண்டவர்கள்தான். தேரை நாங்கள் இழுக்கிறோம் என்று கலெக்டர் தயவால் அலப்பரை காட்டுவது அசத்தல்.
சிவகார்த்திகேயனும் அனிருத்தும் இணைந்து பாடிய எதுக்கு மச்சான் காதலு பாடல் ஏற்கெனவே ஹிட். அதுமட்டுமல்ல, ரகுநந்தனின் எல்லாப் பாடல்களுமே ஸ்வீட்.
படங்களில் பார்த்துப் பார்த்து சலித்துப் போன காட்சிகள் வெறுப்படிக்கின்றன.
மா.சி. - மண்வாசனை!
குமுதம் ரேட்டிங் - ஓகே














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.