கதைச் சுருக்கம்
கல்கி சினி விமர்சனம்
ஒரு படத்தில் இரண்டு கதையை சொல்லி ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர். முதல் படத்தில் ஆன்டனி... 75 வயது ஆன எஸ்.ஏ.சி. தன் காதலியைத் தேடி சிம்லா வருகிறார். வழிநெடுக அவர் காதல் நினைவுகள், இளமைக்கால காதலியாக கல்கத்தா நாயகி பர்பி கோஸ் இளமை பொங்க இளமை நாயகன் அபி சரவணனுடன் அடிக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.
எஸ்.ஏ.சி. இறந்து விடுவார் என்ற சஸ்பென்ஸ் வைத்து, காதலியைத் தேடும் பயணத்தில் காதலியைப் பார்த்ததும் உயிர் விடும் காட்சிகள் மனத்தை கனமாக்குகிறது. ஒளிப்பதிவாளர் அருண்பிரசாத் சிம்லா அழகை அள்ளி வந்துள்ளார்.
அடுத்து இரண்டாவது கதை, செல்வி 5ம் வகுப்பு கொண்டிவீரன்பட்டி என்ற கிராமத்தில் நடக்கும் கதை. ரோபோ சங்கரும், செவ்வாழையும், சாய் கோபியும், ஆடுகளம் ஜெயபாலும் அந்தக் கிராமத்தில் வைத்ததுதான் சட்டம்.
கிராமத்தில் வாழும் பூங்கொடிக்கு அவர் தங்கை செல்விதான் உலகம். அந்தச் செல்வியை ரோபோ சங்கரும், சாய் கோபியும் கெடுத்து தூக்கிப் போட, பூங்கொடி வெகுண்டெழுந்து எப்படிப் பழிவாங்குகிறார் என்பதே இன்னொரு கதை.
புதுமுக நடிகை சனுலட்சுமி பூங்கொடியாக வந்து அற்புதமாக நடிப்பைத் தந்துள்ளார். படம் இளையராஜாவின் இசையால் நிற்கிறது. பாரதியாரின் பாடலான நெஞ்சு பொறுக்குதில்லையே பாடல் அருமை. வசனம் எழுதிய கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்டலாம்.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!