கதைச் சுருக்கம்
குமுதம் சினி விமர்சனம்
காக்கி சட்டை!
ஆட்களை கோமா நிலைக்குக் கொண்டு சென்று உறுப்புகளை அகற்றி பிசினஸ் செய்பவர்களை போலீஸ் கண்டுபிடிக்கும் இன்னொரு படம்!
சிவகார்த்திகேயன் எpfட்ரியே அவரது மாஸ் அவதாரத்தைச் சொல்கிறது. காமெடி கொஞ்சம்தான் என்றாலும் டான்ஸிலும் ஃபைட்டிலும் பட்டை கிளப்புகிறார். காதலியை டென்ஷனாக்க ஐட்டத்தை அழைத்துக் கொண்டு போகும் காட்சியில் சிரிக்கிறார்கள்!
ஸ்ரீதிவ்யா தோன்றும் முதல் காட்சியில் கைதட்டல், ஊதா கலர் எஃபெக்ட் போல!
வழக்கம்போல பிரபு. நல்லவராக வந்து, செத்துப் போகிறார்.
இமான் அண்ணாச்சி அவ்வப்போது புன்னகைக்க வைக்கிறார்.
பொய் சொன்னதுக்காக ஒருத்தன் மேல கோபப்படணும்னா அவன் மேல நமக்கு உரிமை இருக்கணும் - வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர்.
யாரோ ஒரு பேர் தெரியாத சிறுவனுக்குப் பதிலாக, கமிஷனரின் மகனையே மாற்றி அனுப்புவது நல்ல டிவிஸ்ட். இயக்கம் துரை. செந்தில்குமார்.
ரகுவரன் ஸ்டைலில் அந்த வில்லன். அட!
குற்றவாளியின் லேப்டாப்பையே தூக்கிச் செல்லாமல் பொறுமையாக காப்பி பண்ணுவது, ஆம்புலன்ஸ் ஆசாமியை சாலையில் யதேச்சையாகப் பார்ப்பது, தந்தையையே கொன்ற கொடூர வில்லன் முன்னால் போய் எப்போதும் நிற்பது போன்றவை எல்லாம் காது, மூக்கு, கண்ணுல புய்ப்பம்!
காக்கி சட்டை - இன்னும் கொஞ்சம் அயர்ன் பண்ணியிருக்கலாம்!
குமுதல் ரேட்டிங் - ஓகே


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!