கதைச் சுருக்கம்
அ நிறம் | அளவு
கதாநாயகனுக்கு ஒரு விசித்திரத் திறமை இருக்கிறது. கார்ட் கவுன்டிங் என்ற உத்தியைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியும் ஆற்றல்தான் அது. காஸினோ எனப்படும் சூதாட்ட விடுதியில் சமிக்ஞைகள் மூலம் அவனும் நண்பர்களும் செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அது அவர்களைச் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள்.
இப்போது வை ராஜா வை படத்தின் கதையைப் பார்ப்போம். கதாநாயகனுக்கு ஒரு விசித்திரத் திறமை இருக்கிறது. வருங்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அவனுக்கு இருக்கிறது. அதைப் பயன்படுத்தி காஸினோ எனப்படும் சூதாட்ட விடுதியில் சமிக்ஞைகள் மூலம் அவனும் நண்பர்களும் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அது அவர்களைச் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள்.
கவனக் குறைவால் இரண்டு முறை ஒரே விஷயம் அச்சாகிவிட்டது என்று நினைக்காதீர்கள். இதன் கதையும் அதன் கதையும் ஒன்றேதான்! ஹிஹி!
ஓக்கே! தமிழ் 21 பற்றிப் பார்ப்போமா?
சீட்டாட்டத்தில் தொடர்ந்து டபுள்ஸ் வந்தால் ஏற்படும் சுபாவத்தைக் கதாநாயகன் கெளதம் கார்த்திக் மாற்றிக் கொண்டால் நல்லது.
இழுவையான கிளைமாக்ஸில் ரம்மி அண்ட் ஷூட் போல ஏதாவது நிகழும் என்று எதிர்பார்த்தால் ஃபுல் கொடுக்கவைத்து, ஆட்டத்தை முடித்துவிடுகிறார்கள். அரஸ்ட் ரம்மி போல விவேக்கின் பெண் வேடத்தின் முழுப் பயனும் கிடைக்க விடாமல் திரைக்கதை தடுத்துவிடுகிறது.
பெண்களும் குடிப்பார்கள் என்ற முன்னேற்றக் கருத்தைச் சொல்வதனால் சில பழம் பெருசுகள் முகத்தைச் சுளிப்பார்கள் என்று தெரிந்து சில பழங்காட்சிகளையும் வைத்திருக்கிறார்கள். நான் சொன்னதைச் செய்யாவிட்டால் உன் குடும்ப உறுப்பினர்களைக் கொல்வேன் என்பது, கட்டிப்போட்டு வைத்தவரைப் பெண் ஒருத்தி காப்பாற்றுவது எனச் சில காட்சிகளைப் பழமைக்க உதாரணமாகச் சொல்லலாம்.
தொடர்ச்சியாக ரம்மி ஆட்டத்தில் ஜோக்கர்கள் வருவதைப்போல சில ஒன் லைனர்கள் பிரமாதமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, அந்த டாக்டர் சொன்ன எதுவுமே எங்க அப்பாவுக்குப் புரியலை. அதனாலேயே அவர் மேல அப்பாவுக்கு ரொம்ப மதிப்பு என்பதைச் சொல்லலாம். வில்லன், இந்த இடத்துக்கு ஒரு சிட்டுக் குருவி கூட வர முடியாது. சுத்திலும் செல்ஃபோன் டவர் இருக்கு என்பது இனனொரு சான்று.
படத்தோடு ஒட்டாவிட்டாலும் எஸ்.ஜே.சூர்யாவின் குத்தாட்டமும், வை ராஜா வை பாடலும் ஒரிஜினல் ரம்மி சேர்ந்த மகிழ்வைத் தருகின்றன. ஒலிப்பதிவும் ஒளிப்பதிவும், ரம்மியும், ஜோக்கரும் ஒருங்கே வந்த நிறைவை அளிக்கின்றன. படத்தின் முதல் பாதி, வேண்டிய சீட்டுகள் தொடர்ந்து வந்ததைப் போன்ற திருப்தியைக் கொடுக்கிறது! காஸினோ காட்சிகள் தமிழுக்குப் புதுமை. தெனாலி ரம்மி வந்ததைப் போல தனுஷின் நுழைவால் தியேட்டரில் உற்சாகம் கொப்பளிக்கிறது. சோலோவாக ஜெயித்துவிடுகிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!