கதைச் சுருக்கம்
---------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
அம்மா ராதிகாவால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வீட்டை விட்டு விரட்டப்படும் விஷால், அதே அம்மாவைச் சுற்றி ஒரு பிரச்னை எழும்போது மீண்டும் வீட்டுக்கு அழைக்கப்படும் சின்னக் கதைதான்.
ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடம்பு, அதிரடி ஆக்ஷன் என்று பார்ப்பவர்களையெல்லாம் ஒற்றை ஆளாக நின்று பொளந்து கட்டுகிறார் விஷால். நடுவில் பயபக்தியாக காதலும் செய்கிறார். அம்மா சென்டிமெண்ட் வேறு போதாதா?
பசுமையான கிராமம், சர்சர்ரென சீறிப்பாயும் கார்கள், அரிவாள்கள் என்றே அடையாளம் காணப்பட்ட ஹரிக்கு இந்த முறையும் அதே களம்தான். என்ன, லாஜிக்தான் கொஞ்சம் மிஸ்ஸிங்.
முறைப்பெண்ணிடம் தான் தவறாக நடக்கவில்லை என்று அம்மாவிடம் விஷால் ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா என்ன?
பளிச்சென்று இருக்கிறார் ஷ்ருதிஹாசன். பாடல் காட்சிகளில் கூடுதல் பளிச். இத பாரு, நானும் உன்னைக் காதலிக்கிறேன். ஆனா உன்னைவிட பெட்டரா ஒருத்தன் கிடைச்சா போய்டுவேன் ஓ.கேவா? என்று அவர் பேசுவது அதிர்ச்சி என்றாலும் ரசிக்கத்தான் வைக்கிறது.
சத்யராஜை டம்மியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடைசியில என்னை செத்த பொணத்தைச் சுட வச்சுட்டியேடா மட்டும் பஞ்ச்!
சூரி பழைய காமெடிகளை சுட்டே காலத்தை ஓட்டுகிறார். அவமானப்பட்டு ஒன்றுமே அறியாதது போல் வந்து விசாரிப்பது மட்டும் கிச்! கிச்!
இப்படியே எங்க வேணா தூக்கிக்கிட்டு போ! (ஒரு) பாடலில் யுவன் தெரிகிறார்.
பூஜை - ரத்த பூஜை!
குமுதம் ரேட்டிங்: ஓகே
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.