கதைச் சுருக்கம்
காவியத்தலைவன் - குமுதம் விமர்சனம்
சுதந்திரத்துக்கு முன்னால் தமிழகத்தில் கோலோச்சிய நாடகக் கலையை களமாக வைத்து ஒரு முழுப்படம் தந்ததற்காக வசந்தபாலனைப் பாராட்டலாம்.
கதை? நாடகத்தில் நடிக்கும் சித்தார்த்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் பிருத்வி ராஜ், அதற்காகக் கொலை செய்யும் அளவுக்கு இறங்குகிறார் என்பதை ஆங்காங்கே காதல், மோதல் என்று கலந்து சொல்லியிருக்கிறார்கள். நாசர், சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா என்று எல்லோருமே வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ அந்தக் காலத்துக்குள் சென்று வந்த உணர்வை நீரவ்ஷா உதவியுடன் ஏற்படுத்தியிருக்கிறார்கள். சூரன் போல பிரத்வியும், சித்தார்த்தும் நடித்துக் காண்பிப்பதாகட்டும், வேதிகா அறிமுகக் காட்சியில் பாடி ஆடுவதாகட்டும், கோபப்படும் நாசர் சாபம் இட்டுவிட்டு, மரணிக்கும்போது ஆசிர்வதிப்பதாகட்டும் காட்சிகள் எல்லாம் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன.
ஆனால்? கதை முழுக்க ஏதோ ஸ்லோமோஷனில் செல்வது போன்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இளவரசியின் மரணம் தவிர மற்ற எல்லாக் காட்சிகளும் சுலபமாக ஊகிக்க முடிகின்றன. சரி, அந்த இளவரசிப் பெண்ணை எங்கிருந்துய்யா பிடித்தீர்கள்? யாருமில்லா பாடலில் ஏ.ஆர். ரஹ்மான் வருடுகிறார். இருவர் பட ஹலோ மிஸ்டர் போலவே ஒன்று. பிரித்விதான் கொலைகாரன் என்பது பாமர ரசிகனுக்கே புரியும்போது, அதை பெரிய ட்விஸ்ட் போல் காட்டுவதும், அதன் பின்னர் இருவரும் ஏதோ பிக்னிக் வந்தவர்கள் போல் மணிக்கணக்காய்ப் பேசுவதும்... முடியல!
கா.த. - பிள்ளையார் பிடிக்கப் போய்....
குமுதம் ரேட்டிங் - ஓகே















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!