கதைச் சுருக்கம்
--------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் தமிழர்கள் இங்கே நிம்மதியாக வாழ்கிறார்களா? அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக அவர்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்? ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயலும் 80 அகதிகள் சென்றார்களா? இல்லையா? என்பதே சிவப்பு படத்தின் கதை.
மிகப் பெரிய அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டும் செல்வா எம்.பி. அவருக்குப் பக்கபலமாக இருந்து கட்டட வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் கோனார் வேடத்தில் ராஜ்கிரண். ராஜ்கிரணிடம் வேலை செய்யும் பாண்டியாக நவின் சந்திரா. யாருக்கும் தெரியாமல் கட்டட வேலை செய்து, ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லும் ரூபா மஞ்சரி. கட்டட மேஸ்தியாக தம்பி ராமைய்யா - இந்த ஐந்து முரண்பட்ட கதாபாத்திரங்களின் மீது அழுத்தமான ஒரு கதையைச் சொல்லியுள்ளார் இயக்குநர் சத்ய சிவா.
ரூபா மஞ்சரியை நவின் சந்திரா விரட்டி விரட்டி வேலை வாங்கும் காட்சியில் இலங்கையில் இருந்து சிங்களனுக்குப் பயந்துதான் இங்கே ஓடி வருகிறார்கள். இங்கேயும் விரட்டியடித்தால் அவர்கள் எங்கே போவார்கள்? என்று ராஜ்கிரண் பேசும்போது திரையதிரக் கைதட்டல்.
ஹெலிகாப்டம் பறந்தால் உடனே ஓடி ஒளிந்து காதைப் பொத்திக் கொள்ளும் ரூபா மஞ்சரி அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். ஈழத்தில் நாங்கள் நிறைய சிவப்பு (ரத்தம்) பார்த்துவிட்டோம். உன்னிடம் சிவப்பு பார்க்க விரும்பவில்லை என்று ரூபா மஞ்சரி காதலன் நவின் சந்திராவிடம் பேசும்போது உருக்கம்.
படத்தின் முடிவில் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள். இப்ப அவர்களை விடடுவிடுங்க. அவங்களை வைத்துப் பிழைப்பு நடத்தாதீர்கள் என்று ராஜ்கிரண் பேசும் வசனம் சாட்டையடி.
சிவப்பு - சிறப்பு.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!