கதைச் சுருக்கம்
---------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
கிராமத்து வீச்சரிவாளும், நகரத்து செல்ஃபியும் இணையும் காதல் மோதல் கலாட்டா.
கொலை வெறியோடு அலையும் பங்காளிகளுக்குள் எலியும் பூனையுமாய் இருக்கும் ஒருவர் வீட்டுப் பெண், இன்னொரு வீட்டுப் பையனைக் காதலிக்க, அவர்களைப் பெற்றவர்களை வெட்டித் தள்ள ஒரு கும்பல் அலைய, அபபுறம் என்ன ஆச்சு? நகைச்சுவை கலந்து தந்திருக்கிறார்கள் இயக்கம் ஆர்.கே.
பரம்பரை பரம்பரையாய்த் தொடரும் கிராமத்து சண்டை சச்சரவுகளை ஆராய்ந்து பார்த்தால் ஒரு கோழி முட்டை அளவுக்குத்தான் பிரச்னை இருக்கும் என்ற கதையை அழகாகத் தந்து, தயாரித்திருக்கிறார் அபிராமி ராமநாதன்.
பிரபு, ஊர்வசி தம்பதிக்குள் இருக்கும் அன்னியோன்யமும், கொஞ்சலும், வெட்கமும் கொள்ளை கொள்கிறது. தென்னவன், ஸ்ரீரஞ்சனி ஜோடியும் போட்டி போடுகிறது.
டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி இருந்தாலும் ஆரியும், மாயாவும் செமை க்யூட் கெமிஸ்ட்ரி.
காமெடிக்கு பால சரவணன், மிஷா கூட்டணி. அவரது காதலியை ஹீரோ கொஞ்ச, ஆமாம், நல்லாத்தான் இருந்திச்சு என்று சரவணன் சொல்லும்போது சிரிப்பு மழை.
சத்யாவின் இசையில் இரண்டு பாடல்கள் இனிமை. எதிர்பார்த்த காட்சிகள்தான் என்றாலும் டீசண்டாக படம் எடுத்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். க்ளைமாக்ஸ் காட்சிகள், சுந்தர் சி பட விறுவிறு!
உன்னோடு கா - பழம்!
குமுதம் ரேட்டிங் - ஓகே













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.