கதைச் சுருக்கம்
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், கங்கனா ரனாவத் நிறைந்திருந்தபோதிலும், அவரின் நடிப்பு எவ்விடத்திலும் சலிப்பை ஏற்படுத்துவதாக இல்லாததே, படத்தின் பெரும்பலம். இந்த படத்தின் மூலம், மாதவன் மீண்டும் வெள்ளித்திரையில் பிரவேசித்துள்ளார். மாதவன் ஒவ்வொரு காட்சியிலும் நிறைவான நடிப்பை தந்து, இழந்திருந்த ஃபார்மை, இதன்மூலம் மீட்டுள்ளார். ஸ்வரா பாஸ்கர், இஜாஜ் கான், ஜிம்மி ஷெர்கல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படியாக உள்ளது.
கங்கனாவின் உணர்ச்சிமிகு நடிப்பு, மாதவனின் கொள்ளை அழகு, தீபக்கின் டைமிங் காமெடி உள்ளிட்டவைகள், ஆனந்த் எல் ராயின் இயக்கத்தில் அழகுற ஜொலித்துள்ளன.
அனைவரும் பார்க்கவேண்டிய படம்
ரேட்டிங் : 4 ஸ்டார்















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.