கதைச் சுருக்கம்
ஸ்ரீதருக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையில இருக்கற ஆழகமான நட்பை... உதய்யும், ரீத்துவும் ரொம்ப தொந்தரவா நினைக்கிறாங்க. உதய் ஒருபடி மேலே போய் அவங்க நட்பை சந்தேகப்படுறாரு. இந்த சூழல்ல, நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு ஸ்ரீதர்/ஸ்ரீதேவியோட பெத்தவங்களும் கேட்க... தங்களோட நட்பை களங்கமில்லாம காப்பாத்த ஸ்ரீதரும், ஸ்ரீதேவியும் என்ன முடிவு எடுக்கறாங்கன்னு க்ளைமாக்ஸ் சொல்லுது.
யார் என்ன சொன்னாலும் தனக்கு பிடிச்சதை மட்டும் செய்ற டோன்ட் கேர், கதாபாத்திரத்துல சித்தார்த் சிறப்பா நடிச்சிருக்காரு. தனக்கும் ஸ்ருதிக்குமான நட்பை அப்பாவுக்கு புரியவைக்கும் போது நெகிழ வைக்கிறாரு. சித்தார்த்தை செல்லமா திட்டி உதைக்கும்போதும், தன்னம்பிக்கை வார்த்தைகள் பேசும்போது, நட்பை விட்டுக் கொடுக்க முடியாம தவிக்கும் போதும்.... சூப்பர் ஸ்ருதி. குறைன்னா... தெலுங்கு வாயசைப்போட ஒண்ணா சேர முடியாம திண்டாடுற தமிழ் மொழிபெயர்ப்பு கொஞ்சம் உறுத்தலா இருக்கு. மத்தபடி... ஆண் - பெண் நட்பு புனிதமானது!ன்னு அழுத்தமா சொன்னதுக்காக நிச்சயம் படத்தை பாராட்டியே ஆகணும்.
மொத்தத்தில் "ஸ்ரீதர்" - "நட்புக்கு மரியாதை"
ரசிகன் குரல் - ஹீரோன்னாலே கிடார்தான் வாசிக்கணுமா...? ஏன் தவில், நாதஸ்வரமெல்லாம் வாசிக்கக் கூடாதா...?!





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!