கதைச் சுருக்கம்
ஹீரோ ராமின் நடிப்பை குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் அவர் ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருக்கிறார். அவர் மிகவும் ஸ்டைலிஷாகவும், அழகாகவும் இருக்கிறார். ஹீரோ ராம் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதாரமாகும். இரண்டு நாயகிகளும் அழகாகவே வந்து செல்கின்றனர். சோனல் சௌகானின் நடிப்பு முதல் பாதியில் சிறப்பாக இருக்கின்றது. ஆனால் இரண்டாம் பாதியில் அவருக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணும் அளவிற்கு அவருடைய பங்களிப்பு குறைந்து விடுகின்றது. ராகுல் ப்ரீத் சிங் பாரம்பரிய முறையில் மிகவும் அழகாக வந்து அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விடுகிறார். அவர் பாடல் காட்சிகளில் கிளாமராக வந்து அசத்துகிறார். அவருக்கு நடிப்பு முழுமையாக வரவில்லை என்ற குற்றசாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகின்றது. இது தவிர ப்ரித்வி, நாராயணா, பிரபாஸ் ஸ்ரீனு, பவித்ரா லோகேஷ், வெண்ணெல கிஷோர், தேஜஸ்வி மடிவாடா போன்றோர்களின் நடிப்பு சிறப்பாகவே உள்ளது. வீக்எண்டு வெங்கட ராவ்வாக வரும் பிரபல காமெடியன் பிரம்மானந்தம் ஒரு கலக்கு கலக்கி விடுகிறார்.
படத்தின் முதல் பாதி மிகவும் விறு, விறுப்பாக செல்கிறது. கதை களம் கொஞ்சம் பழசாக இருந்தாலும், நேர்த்தியான திரைக்கதையின் மூலம் படம் செம ஸ்பீடாக செல்கிறது. தமனின் இசை படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றது. போர்ச்சுகல் நாட்டை மிக அழகான வகையில் சமீர் ரெட்டியின் கேமரா படம் பிடித்து இருக்கின்றது. எடிட்டிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் பண்டக செசுகோ ஒரு குடும்ப பாங்கான பொழுதுபோக்கு சித்திரம்.













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.