கதைச் சுருக்கம்
இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - ரமேஷா / இசை - சித்தார்த் விபின்
பாடல்கள் - யுகபாரதி, மோகன்ராஜ் / கலை - சீனு
நடனம் - தினேஷ் / ஸ்டன்ட் - மகேஷ்
தயாரிப்பு நிர்வாகம் - லோகு - சங்கர் / தயாரிப்பு மேற்பார்வை - ஆஸ்கார் நாகராஜ்
இணை தயாரிப்பு - கே.ஜெயச்சந்திரன் ராவ்
தயாரிப்பு - சுதர்சன வெம்புட்டி.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் காம்ரன்.
இவர் ராஜ்கபூர், பூபதிபாண்டியன், எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனர் காம்ரனிடம் கேட்டோம்.... நம்மை சுற்றிலும் நண்பர்கள் என்கிற பெயரில் சில நவரச திலகங்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனின் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை! இதை 90 சதவீதம் காமெடி கலந்து பேமிலி என்டர்டெயின்மென் படமாக உருவாக்கி வருகிறோம். பொள்ளாச்சியில் 60 சதவீதம் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்து விட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி, கும்பகோணம் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது என்றார் இயக்குனர் காம்ரன்.













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.