கதைச் சுருக்கம்
-------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
விறுவிறுவென ஒரு படம் தந்திருக்கிறார் திரு!
கதை?
சந்தோஷமோ, துக்கமோ, கோபமோ, சப்தமோ அது எந்த இடமாக இருந்தாலும் டக்கென தூங்கிவிடும் குறைபாடு உடையவர் விஷால். கர்ப்பமாக இருக்கும் அவருடைய காதலியை 4 பேர் கேங் ரேப் செய்துவிட, அந்தக் கொடூரமான நேரத்திலும் தூங்கிவிடும் விஷால், தனி ஒரு மனிதனாக எதிரிகளை எப்படி சூறையாடினார் என்பதைச் சொல்லும் அதிரடி சப்ஜெக்ட் இது.
விஷால் வெரி நீட். பத்து நிமிடத்துக்கு ஒருமுறை தடால், தடால் என தரையில் விழுவதாகட்டும், (வலிக்காதோ?) லட்சுமி மேனனைக் காதலிக்கும் தயக்கமாகட்டும், லட்சுமியின் அப்பா, உன்னை மாதிரி குறைபாடு உள்ள ஒருவனுக்கு உன் மகளைக் கட்டிக் கொடுப்பாயா? என்று உருமும்போது, மாட்டேன் சார். என்று சொல்லும் நேர்மையாகட்டும், தூக்கம் வராமல் இருக்க காதில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்வதாகட்டும் செம ஸ்கோர் அடிக்கிறார். கறுப்பு மனிதன்!
லட்சுமி மேனன் எதற்கும் துணிந்துவிட்டார் போல! விஷாலைத்தான் திருமணம் செய்வேன் என்று அவர் காட்டும் பிடிவாதம் நல்ல முதிர்ச்சி, க்ளோஸப் காட்சிகளில் முகமும் அப்படித்தான்! அந்தப் பச்சக் முத்தக் காட்சியில் தியேட்டரில் விஸில் அடிக்கிறார்கள்! (ரசிகர்கள் அவ்வளவா காய்ந்து போய்க் கிடக்கிறார்கள்) ஜென் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
கதை, திரைக்கதை எல்லாம் செமையாய் மிங்கிள் ஆகி, பட்டை கிளப்பும் நேரத்தில் திருஷ்டிப் பரிகாரம் போல, அய்யோ அம்மா விட்டுடுங்கடா என்று அமைந்திருக்கிறது அந்த அரை மணி நேர ஃப்ளாஷ் பேக்! இனியா ஏம்மா இப்படி?
நா.சி.ம - வேகம் வேகம்!
குமுதம் ரேட்டிங் - ஓகே.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.