கதைச் சுருக்கம்
---------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, அந்த இடத்தை அடைய அவர் பட்ட கஷ்டங்கள், வலியைப் பற்றி விரிவாக கூறும் படம்.
ராஞசியில் கிரிக்கெட் கிரவுண்டுக்கு தண்ணீர் பாய்ச்சும் ஒரு சாதாரண ஊழியரின் மகனான தோனி, அவரது பள்ளிப் பயிற்சியாளர் தொடங்கி, நண்பர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புக் கொடுத்து தோனியை கேப்டன் என்ற இடத்தில் உட்கார வைப்பது விறுவிறுப்பு. குடும்ப சூழலுக்காக ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக வேலைக்குப் போயும், அதில் மனம் ஒன்றாமல் ராஜினாமா செய்து விட்டு இந்திய அணிக்குள் நுழைய அவர் படும்பாடு, எந்த கிரிக்கெட் ரசிகர்களையும் கலங்க வைத்துவிடும்.
தோனியாகவே வாழ்ந்திருக்கிறார் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட். ஹெலிகாப்டர் ஷாட், சிக்ஸர் ஷாட், நிராகரிப்பு, காதல் என்று எதையும் அனாவசியமாக ஸ்கோர் செய்கிறார்.
தோனியின் முதல் காதலி ப்ரியங்காவாக திஷா பட்டானி, காதல் மனைவி சாக்ஷியாக வரும் கயிரா அத்வானி மனதில் நிற்கிறார்கள். அப்பா அனுபம்கெர், அக்கா பூமிகா, நண்பர்கள் என்று அனைவரும் அசத்தல், யுவராஜ்சிங், சச்சின் என்று இடையிடையே காட்டியது உற்சாகம்.
படத்தின் பெரிய ப்ளஸ் வசனம், லைஃபும் கிரிக்கெட் மாதிரிதான். எல்லா பாலும் அடிக்கிறமாதிரி வராது இப்படி நிறைய அப்ளாஸ்.
தோனியைப் பற்றி எல்லாமே தெரிந்த விஷயங்கள்தான். என்றாலும், விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அவரது வாழ்க்கையை சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நீரஜ் பாண்டே.
எம்.எஸ். தோனி: ரசிகர்ளுக்கு டபுள் செஞ்சுரி.
குமுதம் ரேட்டிங்: ஓகே














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!