கதைச் சுருக்கம்
மற்றபடி, அனந்த கிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் கதை, திரைக்கதையைக் காட்டிலும், காட்சிப்படுத்தலிலும், தொழில்நுட்பத்தில் சிறந்த விளங்கும், மெட்ரோ - செம மிரட்டல் மெர்சல் ப்ரோ!
--------------------------------------------------------
கல்கி விமர்சனம்
கல்லூரி மாணவர்கள் சங்கிலி பறிப்புக் குற்றங்களில் ஈடுபடுவதை அடிக்கடி நாளிதழ்களில் பார்க்கிறோம் அல்லவா? அந்த ஒற்றைவரிதான் கதை.
படத்தைப் பார்க்கும்போது பல கேள்விகள் எழுகின்றன. வரி விலக்குக் கிடைக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்துதான் மெட்ரோ என்ற பெயர் வைத்தார்களா? சங்கிலி பறிப்பவர்கள் மெட்ரோ நகரங்களில் மட்டும்தான் செயல்படுகிறார்களா?
குறிப்பிட்ட படங்களைக் குழந்தைகள் பார்க்கக்கூடாது எனத் தடை செய்வார்கள் அல்லவா? இந்தப் படத்தைக் கல்லூரி மாணவர்கள் பார்க்கக்கூடாது என்று தடைவிதிக்கலாம் போல இருக்கிறதே? பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களா? அல்லது அவர்களிடம் இருந்து எப்படி சங்கிலி பறிப்பது என்பதை விஸ்தாரமாகச் சொல்லிக் கொடுக்கிறார்களா?
அற்புதமான சிறுகதை போலத் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக நகரும் படத்தில், யோகிபாபு வரும் சொதப்பல் காட்சகிளை ஏன் வைத்தார்கள்? சங்கிலியைப் பறித்த திருடன் ஓடத் தான் பார்ப்பானே தவிர, தன்னைப் பிடிக்க முடியாமல் தூரத்தில் நின்று திட்டுபவனை நிதானமாக இறங்கித் தாக்க வருவானா? திருடிவிட்டுத் தப்பும்போது தொடர்ந்து வந்து விபத்துக்குள்ளாகும் காவல் அதிகாரியிடமே போய் அவரது செயினையும் திருடுவானா?
அபத்தமான நகைச்சுவையும், டூயட்டுகளும் இல்லாமல் ஆறுதல் அளிக்கும் இந்தப் படத்தில் அசரீரி பாட்டுகள் எதற்கு?
கீறல் என்ற கதாபாத்திரம் துருத்திக் கொண்டு இருக்கிறதே? அது எதற்கு?
பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் மிடில் கிளாஸ் அப்பா, அம்மாவை அப்படியே சித்தரித்திருக்கும் நடிகர் மற்றும் நடிகையை வருங்காலத்தில் சிறப்பாகப் பயன்படுத்துவார்களா?
அடிமையாக இருக்கப்போகிறாயா அல்லது அடிமையாக்கப் போகிறாயா? மாதிரியான கூர்மையான வசனங்களை எழுதியவரைப் பாராட்டியே தீரவேண்டும்தானே?
பைக்கில் அழைத்துவரும் குழந்தையைக் குரூரமாகச் சாலையில் விழவைக்கும் காட்சி தேவைதானா? தணிக்கையில் இந்தக் காட்சி எப்படித் தப்பித்தது? அப்பா மகன் நெருக்கத்தை காண்பிக்க அப்பாவிடமே சிகரெட் மற்றும் மதுவை மகன் கேட்கும் காட்சி உசிதம்தானா?
காதலியின் தூண்டுதலால் சக்திக்கு மீறி செல்போன், பைக் வாங்கியே ஆக வேண்டும் எனச் சில மாணவர்கள் பித்தாக மாறிப் பாதை தவறுவதை இந்தப் படம் பார்த்தாவது திருத்திக் கொள்வார்களா?
பிள்ளைகளின் ஆசையைப் பூர்த்தி செய்யலாம் ஆனால் பேராசைகளைப் பூர்த்தி செய்ய கூடாது என்று இந்தப் படத்தில் வலியுறுத்தப்படும் கருத்தை மிடில் கிளாஸ் பெற்றோர்கள் மனத்தில் இருத்துவார்களா?
மெட்ரோ படமா? பாடமா?
திரையரங்கில் சிங்கநல்லூர் ராம்பிரசாத் கருத்து: பிள்ளைகளுக்கு வர் செல்லம் கூடாது. பெண்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் மாதிரியான நல்ல கருத்துக்கள் இருக்கு. பலரும் புதுமுகங்களா இருந்தாலும் நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா எப்படித் திருடணும்னு கத்துக் கொடுக்கிற மாதிரி இருக்கு!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!