கதைச் சுருக்கம்
தந்தானே தந்தானே துட்டு தந்தாணே.., ஓடி ஓடி தேடி தேடி... உள்ளிட்ட பாடல்களிலும், பின்னணி இசையிலும் திவாகர் சுப்ரமணியத்தின் இசை பேசப்படும் விதத்தில் இருக்கிறது
நான், தாத்தாவுக்கு ஹெல்ப் பண்றேன் தாத்தா? எனக்கு ஹெல்ப் பண்றாரு.., எனும் நையாண்டி வசனங்கள், சுடோ புல் பார் அபெக்ட் எனும் அனந்துக்கு வந்த வியாதி,
உள்ளிட்ட காமெடிகளாலும், இந்தியாவின் இன்றைய டைமிங்கிற்கு ஏற்ற டைட்டிலாலும், கதையாலும் கவனம் ஈர்க்கும் இயக்குனர் மேஜர் கெளதமின் திறமைக்கு கட்டியம் கூற, மலேசிய பத்துமலை முருகன் கோயிலை எத்தனையோ திரைப்படங்களில் காட்டியிருந்தாலும், இதுவரை எந்தப்படத்திலும் காட்டியிராத கோணத்தில் மிக சிறப்பாக, படுபிரமாண்டமாக கதையோடு ஒட்டி காட்டியிருக்கும் ஒன்று போதும், வாவ்! புலிக்கு பிறந்தது பூனையாகுமா.? ! மேஜர் கெளதம் அப்பா மாதிரி., நடிப்பில் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றாலும் இயக்கத்தில் நிச்சயம் ஜெயிப்பார் என நம்பலாம்!
ஆக மொத்தத்தில், கண்ல காச காட்டப்பா படத்திற்கு காமெடி விரும்பும் ரசிகர்கள் நம்பி போலாம்ப்பா!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.