கதைச் சுருக்கம்
ஹிருத்திக் ரோஷன் அருமையாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கண்பார்வையற்றவராக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மனைவியுடனான ரொமான்ஸ் காட்சிகளிலாகட்டும், எதிரிகளை பழிவாங்கும் இடங்களில் அவர் காட்டும் கோபங்களாகட்டும் அசத்தியிருக்கிறார் மனிதர்.
ஹிருத்திக்கை போலவே அவரது பார்வையற்ற மனைவியாக வந்து மடிந்து போகும் யாமியும் சிறப்பாக தன் ரோலை செய்திருக்கிறார்.
வில்லன் வினித் ராய், சக நடிகர்களான நரேந்திர ஜா, கிரிஷ் குல்கர்னி, அகிலேந்திர மிஸ்ரா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ராஜேஷ் ரோஷனின் இசையில் ஹசீனா கா தீவானா... மெயின் தேறி காபில் ஹூம்... உள்ளிட்ட பாடல்கள் மனதை வருடுகின்றன.
சுதீப் சாட்டர்ஜி மற்றும் அயன்கனா போஸ் இருவரின் ஒளிப்பதிவும் ரம்மியமாக தெரிகிறது. அவிக் அலியின் படத்தொகுப்பும் ஓகே.
ஒரு சாதாரண கதையை ரசிகர்களுக்கு எந்தளவுக்கு சுவாரஸ்யமாக கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு ரசிக்கும்படியாக அதேசமயம் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையையும் அமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் குப்தா. அதிலும் ஆக்ஷ்ன் காட்சியை கூட யதார்த்தம் மீறாமல் படமாக்கியிருப்பது படத்திற்கு பெரும் பலம்.
மனைவியை இழந்து வாடும் பார்வையற்ற கணவனின் துயரத்தை உணர்வுப்பூர்வமாக, அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிவு செய்திருக்கிறது இந்த ‛காபில்.
மொத்தத்தில் ‛காபில் - ‛பலம்














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.