கதைச் சுருக்கம்
------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
காதல், பிரேக் அப், மறு காதல் என்று எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் யூத்களின் கதை!
முத்துராமனின் பேரனுக்கு டான்ஸ் நச்சென்று வருகிறது. குறும்புத்தனமும் கொப்பளிக்கிறது. போதாதா? சரி, தலை வழிய முடி வைத்திருக்கும் கௌதமுக்கு முடி கொட்டுகிறது என்று காமெடி எதற்கோ? ஒரே வேளை கார்த்திக்கை நினைத்து திரைக்கதை அமைத்தார்களோ?
ரொம்ப நாள் கழித்து பிரபு! முன்பாதியில் சும்மா இருந்தாலும், தான் தவறாக கௌதமைக் கடத்திவிட்டது தெரிந்த பிறகு போகும் காமெடியில் தான் இன்னும் இளைய திலகம்தான் என்பதை நினைவு படுத்துகிறார்.
ராகுல் பிரீதிசிங், நிகிஷா பட்டேல் என்ற இரண்டு ஜிங்கிலிகள். பாடல் காட்சிகளில் என்ன குத்து! கும்மாங்குத்து! மற்றபடி சும்ம சுத்து!
வசனமும் காட்சியமைப்புகளும் ஒரே மாதிரி இருப்பது இழுத்தடிக்கிறது.
க்ளைமாக்ஸில் கல்யாண வீட்டில் சரக்கடித்துவிட்டு சம்பந்தமே இல்லாமல் ஒருவர் செய்யும் சுந்தர் சி டைப் ஹஹாலாட்டா ஆஸம்! சும்மா இருக்கும் மக்களை ஏத்தவிட்டு கும்பலுக்கே அடி வாங்கிக் கொடுக்கும் காட்சி, அரைத்தூக்க மனிதர்களுக்கும் சிரிப்பு டானிக்! இயக்கம் ரவி தியாகராஜன்.
இமானின் இசையில் நீ என்ன பெரிய அப்பாடக்கரா பாடல் டக்கர்!
என்னமோ ஏதோ ஏனோ தானோ!
குமுதம் ரேட்டிங் - ஓகே.













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!