கதைச் சுருக்கம்
அ நிறம் | அளவு
பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழிவாங்கும் பேய்க் கதைதான் இதுவும். ஆனாலும் படம் முழுவதும் வருகின்ற நகைச்சுவை, படத்தைச் சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறது. விரசமான நகைச்சுவையை தவிர்த்திருக்கலாம்.
ஒரு பண்ணை வீட்டில் பெரும்பாலான படம் நகர்கிறது. கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டும் கவனம் செலுத்தினால் இசைக்கு நல்லது. என்னதான் தாடி, மீசை வைத்திருந்தாலும் சண்டைக் காட்சிகளிலும் சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கருணாஸும் பாலாவும் செம காமெடி காம்பினேஷன்! உதாரணமாகப் பேய்க்குப் படையல் போட்டுக் காத்திருந்து, அது வந்ததும் அலறி அடித்துக்கொண்டு ஓடும் வேளையிலும் மது பாட்டிலையும் சைட் டிஷ்ஷையும் கவர்ந்துகொண்டு ஓடுவதைச் சொல்லலாம்.
கதாநாயகியின் உடலில் பேய் புகுந்திருப்பது தெரியாமல் எல்லோரும் கதாநாயகியை பச்ச மண்ணு என்று சிலாகிக்கும்போது தியேட்டரில் சிரிப்பலை பொங்குகிறது. கோஸ்ட் கோபாலாக வரும் ராஜேந்திரனை வைத்து இன்னும் அதிகமான சிரிப்பை வரவழைக்க ஸ்கோப் இருந்தும் கோட்டை விட்டுவிட்டார்கள்.
இடைவேளைக்குப் பின் வரும் பாடல் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன. ஆனால் பின்னணி இசை பட்டையைக் கிளப்புகிறது. பேய் வசிக்கும் அந்தப் பேட்டையிலேதான் வில்லன்களும் வசிக்கின்றனர். ஆனாலும் பேய் அவர்களை நேரடியாக அட்டாக் செய்யாமல் தான் குடியிருக்கும் வீட்டுக்கு வருபவர்கள் மூலமாக வில்லன்களை வரவழைப்பது ஏன் என்பது அந்தப் பச்ச மண்ணுக்கே புரியும்.

- லதானந்த்
Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!