கதைச் சுருக்கம்
பெபிகர் படத்தில் ரன்வீர் சிங்கின் நடிப்பு கொஞ்சம் சுமார் தான். ஏற்கனவே நாம் அவரது முந்தைய படங்களில் பார்த்து பழகிய நடிப்பு தான் வெளிப்படுகிறது, புதிதாக ஒன்றுமில்லை, இருந்தாலும் அவர் தன் ரோலை சூப்பர் என்று இல்லாவிட்டாலும் ஓகே என்ற அளவில் நடித்துள்ளார்.
வாணி கபூர், அழகாக அதேசமயம் கவர்ச்சியாகவும் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். நடிப்பும் ஓகே,.
விஷால் சேகரின் இசையில் பாடல்களும், மிக்கியின் பின்னணி இசையும் படத்தோடு சேர்ந்து காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. பிரான்ஸை அழகாக படமாக்கியிருக்கும் கநேமின் ஒளிப்பதிவு ஓவியப்பதிவு. நம்ரதா ராவ்வின் படத்தொகுப்பு பக்கா.
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் ஆதித்யா சோப்ரா, முழுக்க முழுக்க இளைஞர்களை குஷிப்படுத்தும் வகையில் பக்காவாக படமாக்கியிருக்கிறார். கதையும் சரி திரைக்கதையும் சரி வேகமாக நகர்வதுடன் ரசிகர்களுக்கு மிகவும் என்டர்டெயின்-ஆகவும் உள்ளது. இருந்தாலும் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப் உறவு, முத்தக்காட்சி... கவர்ச்சி... என இளைஞர்களை மட்டுமே குறிவைத்து படமெடுத்து, குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் விட்டிருப்பது பலவீனம்!
மொத்தத்தில் ‛பெபிகர் - இளைஞர்களுக்கு மட்டும் ‛கலர்புல்














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.